tamilnadu

img

கடன் மறுப்புக்கு எதிராக வலுவான இயக்கம்

திருவனந்தபுரம், மே 28 ஒன்றிய அரசின் கடன் மறுப்புக்கு எதிராக ஊழியர்கள் வலுவான இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தாமஸ் ஐசக் கூறினார். ஒரே நேரத்தில் ரூ.15,000 கோடிக்கு மேல் வெட்டப்பட்டது. கேரளா பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பொதுமக்களிடம் கருத்தை ஏற்படுத்த முயன்ற ஊடகங்கள் கூட இப்போது விசயங்களை உணரத் தொடங்கியுள்ளன என்றார். என்.ஜி.ஓ., சங்கத்தின் வைர விழா மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் மக்கள் சிவில் சேவை’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் பேசினார். பொதுத்துறையை எப்படி அழிப்பது என்று மோடி அரசு ஆய்வு செய்து வருகிறது. புதிய பதவி உருவாக்கம் மற்றும் பிஎஸ்சி நியமனம் கேரளாவில் மட்டுமே நடக்கிறது. மக்கள் சிவில் சர்வீஸ் கேரளாவில் உள்ளது. இன்று கேரளாவை உருவாக்கு வதில் சிவில் சர்வீஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரள அரசு நலத்திட்ட பணிகளையும் வளர்ச்சிப்பணிகளை யும் மேற்கொள்ளத் தயாராக உள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான திட்டங்கள், மூலதன முதலீடு மற்றும் தொழில் முயற்சிகளில் பின்தங்கியே உள்ளது. இதை மாற்றாமல், புதிய கேரளாவை நோக்கி முன்னேற முடியாது. செயல்திறனை அதிகரிக்க அறிவிப்புகள் மட்டும் போதாது. ஊழலையும் சமரசமின்றி கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். நிர்வாகிகள் தேர்வு திருவனந்தபுரத்தில் நடந்த என்ஜிஓ யூனியன் வைரவிழா மாநாட்டில் மாநிலத் தலைவராக எம்.வி.சசிதரன், பொதுச் செயலாளராக எம்.ஏ.அஜித்குமார், பொருளாளராக வி.கே.ஷீஜா தேர்வு செய்யப்பட்டனர்.

;