tamilnadu

img

ஏன் சாரல்... மழை பெய்யாதா..? - கணேஷ்

தென்மேற்குப் பருவக்காற்று..தேனிப்பக்கம் வீசும்போது..
ஹேய்... மழைல நனைஞ்சுட்டியா.. இதுல பாட்டு வேற..
குளிருது அங்கிள்.. அதான் பாட்டுப்பாடி சமாளிக்கப் பாக்குறேன்.. வகுப்புல தென்மேற்குப் பருவக்காற்று பத்திதான் படிச்சோம்... செப்டம்பர் வரைக்கும் இருக்குமே.. உங்களுக்கு ஒரு கேள்வி..
கேளு... நான் கேக்கலாம்னு இருந்தேன்... நீ முந்திக்கிட்ட..
இந்தப்பாட்டு கேட்டுருக்கீங்களா... தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசுறப்ப ஏன் சாரல்... மழைனு ஏன் கவிஞர் எழுதல..?
ஓ.. அவருக்கு சாரல் புடிச்சதா இருந்திருக்கும்.. 
அதான் இல்ல.. சொல்றேன் கேளுங்க.. தென்மேற்குப் பருவக்காற்று அரபிக்கடல்ல கிளம்பி, கேரளாவத் தாண்டி, மேற்குத் தொடர்ச்சி மலைல மோதி கேரளாவுல மழை.. தேனில சாரல்.. பாலக்காடுல மழை, கோவைல சாரல்.. மும்பைல மழை, புனேவுல சாரல்.. எங்களுக்கு பாடத்துல இருக்கு இது... தேனி, கோவை, புனே எல்லாம் மழை மறைவுப்பகுதி.. 
அடேங்கப்பா.. மலைய நகர்த்தி கிழக்க கொண்டு போயிட்டா தமிழ்நாடு முழுக்க மழை பெய்யுமோ..
ராஜஸ்தான்காரங்களும் இப்புடி யோசிக்கலாம்... ஆரவல்லி மலைத்தொடரை கொஞ்சம் மேல கொண்டு வந்து படுக்க வசத்துல வெச்சா பாலைவனம் சோலையா மாறிடலாம்னு..
இதெல்லாம் சாத்தியமா..?
மனுசனால முடியாதது எதுவுமில்லை.. நேரம் பிடிக்கலாம்.. 
எதுக்கு நனைஞ்சுட்டே வந்த... நின்னு வந்துருக்கலாமே..
ஒதுங்க இடமில்ல.. கூட்டமா இருந்துச்சு.. மக்கள் தொகை பெருகிட்டே போகுது..
நாமதான் இப்போ உலகத்துலயே முதல் இடம்...
ஆமா, அங்கிள்... ஆனா, மயிரிழைலதான் வேறுபாடு.. 
அட மயிரிழை.. இந்த வார்த்தையக் கேட்டு ரொம்ப நாளாச்சே..
hairline.. ஆங்கிலத்துல இப்பவும் நிறைய பயன்படுத்துறோமே.. 
hairline frantureனு சொல்றதா..?
பெரிய பாதிப்பில்லாத சின்ன முறிவுங்குறத அப்புடிச் சொல்றது உங்க காலத்துலயும் உண்டு... இப்பவும் அப்புடித்தான் சொல்றோம்.. நான் சொல்ல வந்தது கணினித்திரைல ஓடுற மெல்லிசான கோடு அது.. அமெரிக்க அஞ்சல் துறை மயிரிழைனா 0.007 அங்குலம்னு சொல்றாங்க... சிலர் 0.003னும் சொல்றாங்க.. 
இன்னுமா அங்குலம்னு சொல்லிட்டு இருக்காங்க.. ஒரு அங்குலம்னா 2.54 சென்டி மீட்டராச்சே..
ஆமா ஒரு அடிக்கு 12 அங்குலம்... inchனு ஆங்கிலத்துல சொல்றத இன்னும் விடல.. இந்த மெல்லிசான கோடுதான் மக்கள்தொகைல சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடைல இருக்கு..
அப்புடியா.. ஆனா 2022 கடைசில ரெண்டு நாட்டுக்கும் இடைல ஒரு கோடி வேறுபாடு இருந்ததா படிச்சிருக்கேனே..
அங்கிள்... 142 கோடி இந்தியாவுல... 141 கோடி சீனாவுல... அப்புடிப் பாத்தா மயிரிழைதான..
எப்புடி திடீர்னு சீனாவுல குறைஞ்சுது..?
திடீர்னு குறையல... 1970கள்லருந்தே தீவிரமான மக்கள்தொகைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் இருந்துச்சு... 2023ல தான் முதன்முறையா முந்தைய ஆண்டை விட குறைஞ்ச எண்ணிக்கைனு வந்துச்சு... 2 லட்சத்து 15 ஆயிரத்து 585 மக்கள் குறைவா இருந்தாங்க.. 2023 நவம்பர்ல சீனாவுல மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துனாங்க.. அதுலதான் துல்லியமான கணக்கு கிடைச்சுது..
இந்தியாவுல அதிகரிச்சுதா..?
ஆமா அங்கிள்... 14 லட்சத்து 54 ஆயிரத்து 481 பேர் அதிகரிச்சாங்களாம்.. 
அதென்ன.. அதிகரிச்சாங்களாம்..?? குத்து மதிப்பாதான் சொல்ல முடியுமா..?
நாம 2021ல கணக்கெடுப்பு நடத்திருக்கனும்.. கொரோனாவுல தள்ளிப்போட்டது இன்னும் நடக்கல... இப்போ நமக்குக் கிடைக்குற எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கீடு மையம்.. அப்புறம் இன்னும் சில அமைப்புகள் தர்ற விபரங்கள்தான்.. இவங்கள்லாம் சொல்லித்தான் இப்ப 810 கோடிப்பேர் உலகம் முழுக்க இருக்காங்கனு நமக்குத் தெரியும்.. முதல் பத்து இடத்துல இருக்குற நாடுகள்ல நாமளும், நைஜீரியாவும்தான் கணக்கெடுப்ப நடத்தல.. சரி, நடத்தலனா என்ன ஆகும்..?
நம்மளோட அமைப்புல அரசாங்கம்ங்குறது மக்கள் நல அரசு... நலத்திட்டங்கள முறையா செயல்படுத்தனும்னா எண்ணிக்கை தெரியனும்.. எப்படி இருக்காங்கன்னு தெரியனும்.. இதெல்லாம் கணக்கெடுப்புலதான் தெரியும்..
பொது விநியோக முறையும்தான அங்கிள்... 
அச்சச்சோ.. ரேசன்கார்டு காப்பி எடுக்கக் கொண்டு போனேன்.. அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்.. என்றவாறே மீண்டும் மழைக்குள் புகுந்தார்.