தென்னாப்பிரிக்காவில் குளோவர் என்ற பால்பண்ணையில் 5000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆட்குறைப்புக்கு எதிராக 2021 நவம்பர் 22 முதல் இங்கு வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மிகவும் பழமையான, மிகப்பெரிய பால் பண்ணையான குளோவர் 2019-ல் இஸ்ரேலின் சென்ட்ரல் பாட்டிலிங் கம்பெனிக்கு கைமாறியது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் கவனத்தை இந்தப் போராட்டம் ஈர்த்துள்ளது. ஜனவரி இறுதியில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன .பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றது. ஆயிரம் பேருக்கு மேல் ஆட்குறைப்பு செய்யும் நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராகவே வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இஸ்ரேலின் சென்ட்ரல் பாட்டிலிங் கம்பெனியின் நோக்கம், குளோவர் பால் பண்ணையின் சந்தையை அழிப்பதும், தனது இஸ்ரேலிய பொருட்களை இறக்குமதி செய்து விற்பதுமே ஆகும்.