tamilnadu

img

மன்னித்துவிடு நவீன் - பழனி.சோ.முத்துமாணிக்கம்

கிளிகள் மிகவும் அழகான பறவைகள் அதோடு, பேசும் திறன் பெற்றவை. மனிதர்களைப் போல் பேசுவதில் திறமையானவை. கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன. ஆனால் போனின் ரிங்டோனை  காப்பியடிக்கும் சில கிளிகள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கிளியின் பெயர் Gucci. இந்த கிளி ஐபோன் ரிங்டோனை அப்படியே துளி கூட பிசகாமல் ரிங்டோனை இசைப்பது மிகவும் ரசிக்கத்தகுந்ததாக உள்ளது. இந்த செல்லக் கிளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு கிளி எவ்வளவு துல்லியமாக ரிங்டோனைப் இசைக்கிறது என மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ முதலில் குச்சி கவுடா என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது. இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு (Vosmarie Eclectus) வாஸ்மெரி எலக்டஸ் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிடுவதற்கான பிரத்யேக கணக்காகும்.  இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை பூஜா தேவராஜ் ஹர்ஷித் ஆகியோர்  நிர்வகித்து வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப் பட்ட உடனேயே மிகவும் வைரலானது.