tamilnadu

img

‘சிறு தானிய சாகுபடிக்கு வரிச் சலுகை வேண்டும்’

மதுரை, ஜன. 30-  2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவிக்கப்பட் டுள்ளதால், வறண்ட பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளின் வரு மானத்தை உயர்த்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்க ளின் நிலையான சாகுபடிக்கான வழிமுறைகளுக்கு பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்துமாறு தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இந்த ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. நாட்டின் உள் கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள், கிராமப்புற பொருளா தார மேம்பாடு, சுகாதாரம், சுற்று லாத் துறை என பட்ஜெட் 2023-ல் தொழில் வணிகத் துறைக்கு பல எதிர்பார்ப்புகளும் நம்பிக்கை களும் உள்ளன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் டில் வேளாண் உற்பத்தியை அதி கரிப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் விடுத்துள்ள செய்தி வருமாறு: இந்தியாவால் முன் வைக்கப் பட்டு 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்ததன் அடிப்படை யில் ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, உலக நாடுகளுடன் இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இது இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதி யாக மற்றும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் கொண் டது. இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 14.52 மில்லியன் டன்னிலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 18.02 மில்லியன் டன்னாக அதிகரித்துள் ளது. உலகளாவிய சிறுதானிய சந்தை வளர்ச்சி விகிதம் (கூட்டு வரு டாந்திர வளர்ச்சி விகிதம்) 2021 மற்றும் 2026 க்கு இடையில்  4.5 சத விகிதமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சூப்பர் உணவு

நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறையினர் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். சிறுதானியங்களில் ஏராளமான புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் உள்ளதால் இது ஒரு சூப்பர் உண வாக கருதப்படுகின்றது. சிறுதானி யங்களில் ஒன்றல்ல, பல நன்மை கள் உள்ளன; உடல் பருமனைக் குறைப்பதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர் பான நோய்கள், வயிறு மற்றும் கல்லீரல் நோய்களின் அபாயத் தைக் குறைக்கிறது. சிறுதானியங் கள் ஊட்டச்சத்து மற்றும் புரதத் தால் நிரம்பியிருப்பதால், ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போ ராடுவதில் மிகவும் உதவுகிறது. சிறு தானியங்களின் தேவை அதன் ஆரோக்கிய நன்மைகள் காரண மாக உலகளவில் மிகவும் அதி கரித்து வருகிறது, இந்த வாய்ப்பை இந்திய விவசாயிகளும், இளம் தொழில் முனைவோர்களும் சரி யான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயி களை ஊக்குவித்து, சிறுதானியங்க ளை அதிகளவில் சாகுபடி செய்திட ஏதுவாக, பயிர் பாதுகாப்பு பொருட் கள், வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் பிற இடுபொருட் களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதி கரித்து வரும் இடுபொருள் விலை, விவசாயிகளுக்கு பெரும் இடை யூறாக உள்ளது. அத்துடன் இயற்கை வேளாண்மை முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

சிறந்த உள்கட்டமைப்பு, பொது விநியோகத் திட்டக் கொள் முதல், பயிர்களின் ஆரோக்கி யத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு, மண் பரிசோ தனை, பயிர் பன்முகப்படுத்தலை ஊக்குவிக்க குறைந்தபட்ச ஆதார விலை கொள்கை (MSP), நுண்ணீர் பாசனம், கிடங்குகள் விரிவாக்கம், இரசாயன உரங்க ளால் உண்டாகும் பூச்சிகள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள மற்றும் பாது காப்பான தீர்வுகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள்,  விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சித் திட்டத்தை வழங்குதல், குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவ தற்கான புதிய தொழில்நுட்பங்க ளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லா மல் விவசாயிகளின் இலாபத்தை யும் அதிகரித்தல். போன்ற பல  திட்டங்களை சிறுதானிய விவசாயி கள் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க் கின்றனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் பருவகாலநிலை மாற்றத்தால் உணவுப் பாதுகாப்பு தற்போது ஒரு முக்கிய பிரச்சனையாக மாறி வருவ தால், கடந்த சில தசாப்தங்களாக சரிவைக் கண்டுள்ள - நாடு முழு வதும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அனைத்து வகை சிறு தானியங்க ளின் தேவை - மற்றும் நுகர்வை அதிகரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு விவசாயிகளின் எதிர்காலத்தையும் மேம்பாடு அடையச் செய்யும் வகையில் வர விருக்கும் மத்திய பட்ஜெட் 2023-ல்  வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
 

;