பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டுமா
றங்கும் நேர அளவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகிறதா என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உறக்கம் யாருக்கு கிடைக்கிறது, எவ்வளவு நேரத்திற்கு கிடைக்கிறது என்பது உயிரியல், உளவியல் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளின் சிக்கலான கலவையாகும். மேலும் தூக்கத்தை எப்படி அளவிடுகிறோம் என்பதை யும் பொறுத்தது. ஆய்வாளர்கள் உறக்கத்தை இரண்டு முறைகளில் அளவிடுகிறார்கள். ஒன்று மக்களிடமே அவர்கள் எவ்வளவு நேரம் உறங்குகிறார்கள் என்று கேட்பது. ஆனால் மக்கள் தங்களுக்கு கிடைக்கும் உறக்க நேரத்தை துல்லியமாகத் தெரிவிப்பதில்லை. இரண்டாவது முறையில் தூக்கத்தை கணிக்கும் கருவிகளை அணிவது அல்லது ஆய்வு நடக்கும் சோதனைச் சாலையிலோ மருத்துவமனையிலோ பங்கேற்பாளர்கள் தூங்கும்போது மூளை அலைகள், மூச்சு விடுதல் மற்றும் இயக்கங்களை பதிவு செய்யும் பாலிஸோம்னோகிராபி(polysomnography) ஆகியவற்றின் மூலம் அளவிடுவது. உறக்கத்தை பின்தொடரும் கருவிகள் அணிந்த 70000 நபர்களிடம் உலகளவில் நடத்திய ஆய்வில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு வயது பிரிவினரிடையே சிறிய ஆனால் உறுதியான வேறுபாடு காணப்பட்டது. எடுத்துக்காட்டாக 40-44 வயதுப் பிரிவினரில் இந்த வேறுபாடு 23-29 நிமிடங்களாக இருந்தது. பாலி ஸோம்னோகிராபி பயன்படுத்திய இன்னொரு பெரிய ஆய்வில் பெண்கள் ஆண்களைவிட 9 நிமிடங்கள் அதிகம் உறங்குகிறார்கள்; மேலும் பெண்கள் அதிக நேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. வயதாகும்போது உறக்கத்தின் தரம் ஆண்களுக்கு குறைகிறது. ஆனால் இது சராசரி கணக்குதான். ஒவ்வொரு வருக்கும் தூக்கத்தின் தேவை மாறுபடுகிறது. சற்று அதிக நேரமும் ஆழ்ந்தும் உறங்கினாலும், பெண்கள் தங்களின் தூக்கம் குறைவான தரம் கொண்டதாக இருப்பதாக கூறுகிறார்கள். பெண்களில் 40% பேர் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சோதனை சாலை முடிவுகளுக்கும் எதார்த்த நிலைமைகளுக்கும் உள்ள இந்த வேறுபாட்டிற்கு பல காரணங்கள் உள்ளன. சோதனை சாலை ஆய்வுகள் மனநல பிரச்சினைகள், உட்கொள்ளும் மருந்துகள், மதுப் பழக்கம் மற்றும் ஹார்மோன் களின் மாறுபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்வ தில்லை. சோதனை சாலை ஆய்வுகளில் உயிரியல், உளவியல், சமுக காரணிகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வது கடினம். ஆண்பாலினருக்கும் பெண்பாலினருக்கும் உறக்கம் பருவம் அடையும் காலத்திலும் கரு வுறும்போதும்,பிரசவம், மாதவிலக்கு நிற்கும் காலம் ஆகியவற்றின் போதும் வேறுபடுகின்றன. தைராய்ட் கோளாறுகள், இரும்பு சத்து குறைபாடு ஆகியவை ஏற்படுவது ஆண்களைவிட பெண்களுக்கு சகஜம். இவை உடல் அயற்சிக்கும் தொந்தரவான தூக்கத் திற்கும் நெருக்கமான தொடர்பு உடையவை. மன அழுத்தத்திற்கான மருந்துகள் பெண்களுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்படுகின்றன. இவையும் தூக்கத்தை பாதிக்கின்றன. ஆகவே பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடல் அயர்ச்சி அதற்கு காரணமான தூக்கமின்மை ஆகியவற்றிற்கு அடியில் இருக்கும் உடல் கோளாறு கள் உணர்வு அழுத்தங்கள் அல்லது தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் மிகை எதிர்பார்ப்பு கள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும் என்கிறார் வுல்காக் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வரும் மேக்வரே பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரு மான உளவியல் மருத்துவர் அமீலியா ஸ்காட். ஆகவே பெண்களுக்கு அதிக நேரம் தூங்க வேண்டுமா என்று கேட்டால், சராசரியாக தேவைப்படும். ஆனால் அதை விட முக்கியமானது பகலிலும் இரவிலும் அவர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வு பெறுவதற்கு ஆதரவும் வாய்ப்பும் தேவைப்படுகிறது. இந்த தகவல் சயின்ஸ் அலர்ட் இதழில் வெளியாகியுள்ளது.
