tamilnadu

img

காசர்கோடு கல்லூரிகளிலும் எஸ்எப்ஐ வெற்றி

காசர்கோடு, பிப்.20- கேரளத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் கீழ் காசர்கோடு மாவட்டத்தில் கல்லூரி யூனியன் தேர்தல் நடைபெறாமல் இருந்த இரண்டு கல்லூரிகளில் எஸ்எப்ஐ அமோக வெற்றி பெற்றுள்ளது. காசர்கோடு அரசு கல்லூரியில் உள்ள அனைத்து மேஜர் இடங்களிலும் 18 மைனர் இடங்களில் 13 இடங்களையும் எஸ்எப்ஐ வென்றது. நெட்டானிகே பாஜா மாதிரி கல்லூரியில், எஸ்எப்ஐ எட்டு மேஜர் இடங்களில் ஏழிலும் ஏழு மைனர் இடங்களில் ஐந்திலும் வெற்றி பெற்றது. கண்ணூர் பல்கலை கழகத்துக்கு உட்பட்ட காசர்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் 71 கல்லூரிகளில் 60இல் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. 78 பல்கலைக்கழக யூனியன் கவுன்சிலர் பதவி இடங்களையும் எஸ்எப்ஐ பிடித்தது.