சென்னை, மார்ச் 23- மாநில உரிமை மற்றும் கல்வித் துறையை கபளீகரம் செய்யும் தேசியக் கல்விக்கொள்கையின் ஓர் அம்சமான சியுஇடி (CUET) நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு கல்வியை மத்தியத்துவப் படுத்தும் நடவடிக்கையாக தேசிய கல்வி கொள்கை NEP-2020-ஐ வேகமாக அமல்படுத்தி வருகிறது. அதன் முக்கிய நகர்வாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய 45 மத்திய பல்கலைக்கழகத்திற்கான இள நிலை (UG), முதுநிலை (PG) மற்றும் ஒருங்கி ணைந்த முதுநிலை (Integrated PG) சேர்க்கைக்கான பொது நுழைவு தேர்வு (CU-CET) நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக மனியக் குழு (UGC) அறிவித்துள்ளது. இத்தேர்வினை ஒன்றிய அரசு ஏற்கனவே நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த உரு வாக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்த உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் இதில் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இணைந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இத்தகைய அகில இந்திய தேர்வு மூலம் நாடு முழுவதுமுள்ள பல்கலைக் கழகங்களின் தனித்தன்மை சீர்குலைக்கப் படும். மேலும் ஒவ்வொரு துறைக்கான பல்கலைக்கழகம் சார்ந்த தனித்துவமான பாட முறை, கற்பித்தலில் உள்ள சிறப்புதன்மை சிதைக்கப்படும். மேலும் பனிரெண்டு ஆண்டுகள் பெற்ற கல்வி மற்றும் மதிப் பெண்கள் இத்தேர்வு மூலம் நிராகரிக்கப் பட்டு இத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடத்துவது பள்ளிக்கல்வியை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையாகும். தன்னாட்சி அதிகாரத்துடன் மத்திய பல் கலைக்கழகம் தனக்கான மாணவர்களை சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமையை ஒன்றிய அரசின் பொது நுழைவுத் தேர்வு மூலம் பறிக்கப்படுவதால் அதன் முக்கியத் துவம் திட்டமிட்டு குறைக்கப்படும். இத்தகைய சூழலில் CUET நுழைவுதேர்வுக்குள் மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய கல்வி நிறுவனங்கள் (Institute) கொண்டுவரப்பட உள்ளதால் இயல்பாகவே அதன் தனி சிறப்பு மற்றும் நோக்கங்கள் சிதைந்து அனைத்தை யும் தீர்மானிக்கும் சக்தியாக ஒன்றிய அரசு மாறிவிடும். மாநில உரிமையை, தமிழக கல்வி உரிமை யை பாதுகாக்க கல்வித்துறையை கபளீ கரம் செய்யும் ஒன்றிய அரசின் CUET நுழைவு தேர்வு அறிவிப்பை வன்மையாக கண்டிக் கிறோம். இத்தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துக்களை ஏற்காமல் தமிழ் நாட்டிற்கு என தனிக் கல்விக்கொள்கையை உடனே உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.