சென்னை,நவ.4- தமிழ்நாட்டில் மாணவர்க ளுக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி ஆகியோர் போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அரியலூரில் சந்தித்தனர். அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்கள் சென்றுவர கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், இலவசப் பேருந்து பயண அட்டையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை கள் அடங்கிய மனு ஒன்றை கொடுத்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஜி.கே.மோகன், அரியலூர் மாவட்டச் செயலாளர் கொ.குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மனுவின் விவரம் வருமாறு:- தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி வேலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாண வர்களுக்காக காலை, மாலை வேளைகளில் தனியாக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மாணவர்க ளுக்கான பேருந்து நிறுத்தத்தில் கட்டாயம் பேருந்து நின்று ஏற்றிச்செல்ல வேண்டும். கல்வி வளாகத்தின் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கல்வியாண்டிற்கான பேருந்து பயண அட்டை உடனே வழங்க வேண்டும். பேருந்து பயண அட்டை ஆண்டு முழு வதும் பயன்படுத்தும் வகையில் வழங்க வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு பயண அட்டைக்கான தொலைவு 40 கி.மீ வரை வழங்க வேண்டும். ஆய்வு மாணவர்களுக்கென கூடுதல் வழித்தடங்களில் பயண அட்டை செல்லதக்க வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள பேருந்து களை சரிசெய்வதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்கள், நடத்து னர், ஓட்டுநர் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பண்பாட்டு நிகழ்வு களை நடத்த வேண்டும். தனியார் பேருந்துகளிலும்... தனியார் பேருந்துகளிலும் பயண அட்டை செல்லத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டையை விரிவுபடுத்தி வழங்க வேண்டும். உள்ளூர் பேருந்து இல்லாத வழிதடங்களில் வெளியூர் பேருந்துகளிலும் பயண அட்டை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.