tamilnadu

img

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழக முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

சென்னை, டிச. 4- பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி தமிழகம் முழு வதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் மேலும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி தமிழ கத்தில் சுமார் 1.20 லட்சம் காவல் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்கள் டிஜிபி  அலுவலகத்தில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த 2 மாவட்டங்களிலும் கூடு தல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. தலைநகரான சென்னையில் 15  ஆயிரம் காவல் துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும் பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் காவல் பாது காப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

மேலும், திருவல்லிக்கேணி, மயிலாப் பூர், பெரியமேடு, பாரிமுனை உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் டிசம்பர் 6ஆம் தேதி ரோந்துப்பணியை தீவிரப்படுத்த காவல்ஆணையர் சங்கர் ஜிவால் அறி வுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக துணை ஆணை யர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத் த்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (டிச.5) இரவு முதல் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் தீவிர மாக மேற்கொள்ள உள்ளனர். தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளிட்ட வற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப் பட்டுள்ளது. அதேபோல், கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உட்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங் கள் அனைத்திலும் பாதுகாப்பு பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

;