tamilnadu

img

அறிவியல் கதிர்

♦ நன்மையில் ஒரு தீமை 
மனித குல வரலாற்றில் கொள்ளை நோய்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் 1346-1350 ஆண்டு களில் நடைபெற்ற கருப்பு மரணங்கள் என அழைக்கப்படும் நிகழ்வு 25மில்லியன் மக்களை அழித்தது. இது ஐரோப்பிய மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இவர்களில் பிழைத்தவர்களின் மரபணுக்கூறில் ஏற்பட்டி ருந்த சிறு மாறுதல்கள் காலப்போக்கில் மனி தர்களின் நோய் எதிர்ப்பு மண்டல பரிணா மத்தை மாற்றியமைத்ததாம். இது குறித்த ஆய்வில் லண்டன் மற்றும் டென்மார்க்கில் 1000-1800 ஆண்டுகளில் இறந்தவர்களின் மர பணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. நோய் எதிர்ப்பு மரபணுக்கள், சுய நோயெதிர்ப்பு (AUTO INMMUNE)மற்றும் வீக்க நோய்கள்(inflammation) தொடர்பான பகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் நான்கு இடங்கள் கருப்பு மரணத்தினால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள் எனக் கண்டறியப்பட்டன. கொள்ளை நோய்க்கு காரணமான ஒய் பெஸ்டிஸ் எனும் கிருமி தாக்கும்போது மரபணு மாறுதலடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் அக்கிருமிகளை மாறுதலடை யாதவர்களை விட திறனுடன் அழித்தன. ஆனால் இவர்கள் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்க நோய்க்கும் சற்று அதிகமாக ஆட்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மரபணு மாற்றங்கள் ஏற்படும்போது மட்டுமே இப்படிப்பட்ட சிக்கலான நோய்கள் அதிகமாகும் ஆபத்து உண்டாகும் என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பரேரியோ(Luis Barreiro ) மற்றும் அவரது குழுவினர். இருந்தபோதும் நம் முன்னோர்களின் உடலில் கொள்ளை நோய்க்கு எதிராக ஏற்பட்ட பரிணாம மாற்றம் அதிகமானதும் சேதம் விளைவிக்கக்கூடியதுமான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு இட்டு சென்றுள்ளது என ஒரு கருதுகோளை முன்வைக்கிறார்கள்.

♦இணைவில் ஏற்படும் வளையங்கள் 
இரு பெரும் நட்சத்திரங்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்போது ஏற்படும் தடங்களை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் படம் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. இதில் தூசுகளாலான குறைந்த பட்சம் 17 சுற்று வளையங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வளையமும் இரண்டு நட்சத்திரங்களும் நெருங்கும்போது அவற்றின் காற்று மண்டலங்கள்  சந்தித்து வாயுக்களை அழுத்தி தூசு மண்டலத்தை ஏற்படுத்தியதால் ஏற்பட்டதாம்.  

♦ வணிக ரீதியான ஏவுதலில் இஸ்ரோ 
அதிக எடை கொண்ட ராக்கெட் எல்விஎம்3 மூலம் இங்கிலாந்து நாட்டு தொடக்க நிறுவனமான ஒன்வெப்பின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அக்டோபர் 23ஆம் தேதி ஏவ உள்ளது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் இதன் மூலம் வணிக ரீதியான சர்வ தேச விண்கல ஏவுசேவையில் இந்தியா நுழைகிறது. இந்தியாவிலுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒன் வெப்பில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.    

♦ விண்கோள் மோதலிலிருந்து புவியைக் காக்க

‘புவியை காக்கும் திட்டம்’ என்பதன் கீழ் அமெரிக்க நாசா நிறுவனம் ஒரு சோத னையை செப்டம்பர் 26 அன்று வெற்றிகரமாக நடத்தியது. டார்ட் (DART) என்று பெயரிடப்பட்ட இந்த சோதனையில் பூமியிலிருந்து 11 மில்லியன் கிமீ தொலைவிலுள்ள ஒரு குறுங்கோளை (Asteroid) ஒரு சிறு விண்கலம் கொண்டு மணிக்கு 23760/கிமீ வேகத்தில் மோதப் பட்டது. இதன் நோக்கம் என்னவென்றால் எதிர்காலத்தில் ஏதாவது எரிகல் பூமியின் மீது மோதும் நோக்கில் வந்தால் அதை தடுப்பதுவே. இதுவரை எந்த எரிகல்லும் பூமியில் மோதி அழிவை ஏற்படுத்தியதில்லை. 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மோதலில் டைனோசார்கள் உட்பட பூமியிலிருந்த பெரும் பாலான உயிரினங்கள் அழிந்ததாகக் கருதப்பட்டதுவே இதற்கு முன் நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன எனபது குறிப்பிடத்தக்கது. விண்கலத்தின் திசையை மாற்றுவதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் ராக்கெட் உந்துதல் இல்லாமல் சூரியஒளி மூலம் இயக்கப்படும் உந்துமுறை கையாளப் பட்டது. அதிலிருந்த சூரிய ஒளி தொகுப்பில் ஒருபகுதி மூன்று மடங்கு ஆற்றல் தரும் மின்கலங்கள், குவி ஆடிகள் கொண்டது.அதிக செலவு பிடிக்கும் அணு மின்சாரம் இதன் மூலம் தவிர்க்கப்படலாம். மோதப்பட்ட குறுங்கோள் டிமார்பஸ் (Dimorphos)  என்றழைக்கப்படுகிறது. இது டிடிமாஸ் (Didymos) என்கிற சற்று பெரிய குறுங்கோளின் இரட்டை ஆகும். சூரியனை சுற்றும் இவற்றின் சுற்றுவட்டப்பாதை எந்த விதத்திலும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் குறுக்கிடுவ தில்லை. இருந்தாலும் முதலில் குறிப்பிட்டதைப் போல இது ஒரு சோதனைக்காக செய்யப்பட்டது. இவை இரண்டும் ஒன்றின் மறைப்பில் இன்னொன்றாக(eclipse) சுற்றுகிறது. எனவே பூமியிலிருந்து டிமார்பசை காண இயலாது. இவை இரண்டும் தங்கள் பாதைகளை மாற்றிக்கொள்ளும்போது ஏற்படும் ஒளிமாறுதல்களை கொண்டு இதன் சுற்றுவட்டப்பாதை அளக்கப்பட்டது. டார்ட் மோதியதால் எந்த அளவு அதன் சுற்றுவட்டப்பாதை மாறியுள்ளது என்பதையும் அவ்வாறே கணக்கிடப்படும். மோதும் கலத்திலிருந்து இன்னொரு சிறு விண்கலம் மோதலுக்கு 15 நாட்களுக்கு முன் அதிலிருந்து பிரிந்து அதனை பின்தொடர்ந்து படங்களை எடுத்தது. மோதலுக்குபின் நெருக்கத்தில் படங்கள் எடுத்துள்ளது. இவை அனைத்தும் பூமிக்கு வந்து சேர சில நாட்கள் ஆகும்.மோதல் ஏற்பட்ட இடம், அதன் சுற்று சூழல், வீசப்பட்ட தூசி மற்ற பொருட்கள், ஏற்பட்ட பிளவு ஆகியவற்றை ஜேம்ஸ் வெப், ஹப்பிள் ஆகிய தொலை நோக்கிகளும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படும் பிற  விண்வெளி ஆய்வகங்களும் சேகரிக்கும்.    (செப்டம்பர் 26- அக்டோபர் 02 தேதியிட்ட பீப்பிள்ஸ் டெமாக்கரசியில் தோழர் ரகு அவர்களின் கட்டுரையிலிருந்து)

;