தெருநாய் கடித்து பள்ளி மாணவர் உயிரிழப்பு
தருமபுரி, செப்.18- அரூர் அருகே தெருநாய் கடித்து பள்ளி மாணவர் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (15), சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை தெரு நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளா மல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதன்பின் மேல் சிகிச்சைக்காக தரும புரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தெருநாய் கடித்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 30 பேர் காயம்
கோவை, செப்.18- பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின் றிருந்த எல்பிஜி லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்தில் 30.க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இந்த விபத்தில், பேருந்து நடத்து நர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். கோவை மாவட்டம், உக்கடம் பகுதி யிலிருந்த வியாழனன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் (52) என்பவர் 30 பயணிகளுடன் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப் பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் நின்றி ருந்த டேங்கர் லாரி மீது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட் டம் குஜிலம்பாறை பகுதி சேர்ந்த, பேருந்து நடத்துநர் பாலசுப்பிரமணி (44) படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பேருந்தில் பய ணம் செய்த 30 க்கும் மேற்பட்ட பயணி கள் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் இருந்த பொது மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக் காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள் ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீ சார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை யோரத்தில் நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரம் என்ன விலை?
உதகை, செப்.18- நீலகிரி மாவட்டம், பந்த லூர் பஜார் பகுதியில் வரு வாய் ஆய்வாளர் அலுவல கம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் ஒரு பகுதி வருவாய் ஆய்வாளர் குடியி ருப்பாகவும் இருந்து வரு கிறது. தினந்தோறும் வரு வாய் அலுவலகத்திற்கு ஏரா ளமானோர் வந்து செல்கின்ற னர். இந்நிலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரி னங்களின் கூடாரமாக மாறி யுள்ளது. எனவே, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைகள் நிலவரம் (வியாழக்கிழமை)
மேட்டூர் அணை நீர்மட்டம்:118/120அடி நீர்வரத்து:8342கனஅடி நீர்திறப்பு:15800கனஅடி பவானிசாகர் அணை நீர்மட்டம்:99.42/105அடி நீர்வரத்து:1056கனஅடி நீர்திறப்பு:3000கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.38/72 அடி நீர்வரத்து:737கனஅடி. நீர்திறப்பு:1030கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:323கனஅடி நீர்திறப்பு:283கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.54/60அடி நீர்வரத்து:913கனஅடி நீர்திறப்பு:959கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:88.52/90அடி நீர்வரத்து:315கனஅடி நீர்திறப்பு:284கனஅடி