ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு துவங்கியது
திருச்சிராப்பள்ளி, செப்.1 - அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க 6 ஆவது மாநில மாநாடு திருச்சி மாவட்டம் துறையூரில் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுகிறது. திங்களன்று துவங்கிய மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். தேசியக் கொடியை ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ திருச்சி மாவட்ட சங்க ஆலோசகர் பி.செபாஸ்டின் டி குரூஸ், என்.சி.சி.பி.ஏ கொடியை என்.சி.சி.பி.ஏ மாநில பொதுச் செயலாளர் கே.ராக வேந்திரன், ஏ.ஐ. பி.ஆர்.பி.ஏ கொடியை, ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ. மாநிலத் தலைவர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் ஏற்றினர். ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ மாநிலத் தலைவர் கே.ரெங்கராஜு வரவேற்புரை ஆற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை ஏ.ஐ.பி. ஆர்.பி.ஏ. திருச்சி மண்டலச் செயலர் என்.செல்வன் வாசித்தார். சிஐடியு துணை பொதுச் செயலாளர் கண்ணன் துவக்க உரையாற்றினார். ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ பொதுச் செயலா ளர் டி.கே.தேப்நாத், என்.எப்.பி.இ. மாநில பொதுச் செயலாளர் ஜனார்த் தன் மஜீம்தார், எப்.என்.பி.ஓ மேனாள் மாநில பொதுச் செயலாளர் டி.தியாக ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு தலைவர் எஸ்.ஸ்ரீதர், எல்.பி.எப் மாவட்ட துணைத் தலைவர் இளங்கோ, ஏஐடியுசி மாநிலக் குழு உறுப்பினர் க.சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஈராண்டறிக் கையை மாநிலச் செயலாளர் பி.மோகன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஜி.குமார் சமர்ப் பித்தார். மாநாட்டு பணிகளை வர வேற்புக் குழு பொதுச் செயலாளர் மருத நாயகம் ஒருங்கிணைத்தார். மாநாட்டின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை தீர்மானங்கள் நிறைவேற்றுதல், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. ஏ.ஐ.பி. ஆர். பி.ஏ அனைத்திந்திய தலைவர் கே. ராகவேந்திரன் நிறைவுரையாற்றுகிறார்.