tamilnadu

வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை

குளித்தலை, மே 19-கரூருக்கு அடுத்த நிலையில் உள்ள குளித்தலை ரயில்நிலையத்தில் காலை முதல் இரவு வரை இருமார்க்கத்திலும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள்,பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள், சுற்று வட்டாரத்திலிருந்து இரு சக்கர வாகனத்திலோ, சைக்கிளிலோ தான் வந்துசெல்கின்றனர். அப்போது வாகனங்களை ரயில்வே நிர்வாகத்தால் வெட்ட வெளியில் வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கரவாகனம் நிறுத்துமிடத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இதனால் மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் நிறுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் இந்தஆண்டுக்கான ஒப்பந்தம் விடப்படாமல் ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் குளித்தலை ரயில் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கைஎடுத்து குளித்தலை ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனம்நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.