மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
தஞ்சாவூர், செப்.10 - தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம் வெட்டிக் காடு ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளையின் தலைவ ராக மஞ்சுளா, செயலாளராக வசந்தி, பொருளாளராக வெங்க டேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா, ஒன்றியத் தலைவர் துரைராஜன், ஒரத்தநாடு ஒன்றியச் செய லாளர் மதியழகன் ஆகியோர் பேசினர்.
நாளை சிறப்பு கல்விக் கடன் முகாம்
கரூர், செப்.10 - கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன் புதூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவி யல் (தனியார்) கல்லூரி வளாகத்தில் 12.9.2025 (வெள்ளிக் கிழமை) அன்று சிறப்பு கல்விக் கடன் முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வித்யாலஷ்மி போர்டலில் கல்விக் கடன் விண்ணப்பிப்ப தில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் முகாம் அலுவ லர்கள் மூலம் உடனே நிவர்த்தி செய்யப்படும். மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை (ஆதார் அட்டையில் இணைக்கப் பட்டுள்ள கைப்பேசி), மின்னஞ்சல் முகவரி (கடவுச்சொல்), வங்கி கணக்கு புத்தகம் (மாணவர் மற்றும் பெற்றோர்/பாது காவலர்), வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கல்வி கட்டண பட்டியல், புகைப்படம் (மாணவர் மற்றும் பெற்றோர்/பாதுகாவளர்), கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். எனவே, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாணாக் கர்களும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
மணமேல்குடியில் புதிய பாரத திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
அறந்தாங்கி, செப்.10 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மைய தன்னார்வலர் களுக்கு ஒரு நாள் பயிற்சியை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் எழுதப் படிக்க தெரியாத கற்போர் எழுத்துக்களை தெரிந்து கொள்வதற்கும், எழுத்துகளை எழுதுவதற்கு கற்றுக் கொள் வதற்கும் தனது பெயர், தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர் எழுதி பழகுவதற்கும், அதேபோல் பேருந்து பயணம் செல்லும் பொழுது ஊர்களின் பெயர்களை தெரிந்து கொள்வதற்கும் கையெழுத்து போடுவதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்வில் திறன் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்வுகளை நடத்தி கற்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர். தன்னார்வலர் களுக்கு புத்தகங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, செப். 10 - 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலி யல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). பேருந்து ஓட்டுநரான இவர், தொடர்ந்து பேருந்தில் வந்த 17 வயது சிறுமி ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 2020 ஜனவரியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கார்த்திகேயனைக் கைது செய்த னர். இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி கார்த்திகேயனுக்கு போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும், கடத்திச் சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது. சிறைத் தண்டனை காலங்களை ஏககாலத்தில் அனு பவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
4 வழிச்சாலை அமைக்கும் பணியில் இருந்த ஊழியர் மீது தாக்குதல் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை, செப்.9 - விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் சாலைப் பணி நிறைவடையவுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரஙகம்பாடி வட்டம், ஆக்கூர் அருகேயுள்ள மாமா குடி ஊராட்சி, அப்பராசப்புத்தூர் கிராமத்தில் கடந்த செப்.6 ஆம் தேதி வாய்க்கால் அடைக்கப்பட்டிருந்ததால், முதல் நாள் இரவு பெய்த மழையால் மழை நீர் வடிய வழியின்றி, தேங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சாலை பணி மேற்கொள்ளும் வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் என்கிற ஒப்பந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ஆந்திர மாநிலம் விஜயவாடா வைச் சேர்ந்த சாய்பாபு என்பவர், தனக்கு கீழ் பணி செய்யும் ஊழியர்களுடன் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முற்பட்டார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த கோபிநாத், பிரேம் நாத் ஆகியோர் சாய்பாபுவை ஆபாசமாக பேசி ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு மயி லாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஊழியரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தோடு, சாலைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்டு மான ஒப்பந்த நிறுவனத்தினர், பொறையார் காவல் நிலையத் தில் புகார் மனு அளித்துள்ளனர்.