tamilnadu

வறுமையான நாடுகளில் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க துணை நிற்போம்!

வறுமையான நாடுகளில்  நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க துணை நிற்போம்! போப் பிரான்சிஸ் வேண்டுகோள் வாடிகன்,டிச.2- வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிக ளுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வாடிகனில் உரை யாற்றிய போப்பாண்டவர், எய்ட்ஸ் நோயாளிகளைத் தனி மைப்படுத்தி சங்கடப்படுத்தாமல், கருணை காட்டி அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். கொரோனா பெருந்தொற்றால் 65 சதவீத நாடுகளில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.