சென்னை,ஜன.7- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வெள்ளியன்று(ஜன.7) கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை குறைக்கும் மசோ தாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களிடம் இருந் தும், கூட்டுறவு சங்கங்க ளின் உறுப்பினர்க ளிடம் இருந்தும் கூட்டுறவு சங்கங் களில் நிதி முறைகேடு மற்றும் மோசடிகள் நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் அதிகளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கட ன்கள் மற்றும் கோடிக் கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதும் வெளிவந்துள்ளன. எனவே கூட்டுறவு சங்கங் களை பாதுகாக்கும் நோக்கில் அதன் நிர்வா கங்களை நெறிப்படுத்தவும், முறையாக நிர்வகிக்கவும், கூட்டுறவு சங்க செயல்பாடு திறனை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையில் ஒரு சட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 1983 ஆம் ஆண் டில் கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகை முறைகளை மீட்டெ டுக்கவும் அரசு முடிவு செய் துள்ளது. அதை செயல்படு த்தும் வகையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரம்ப நிலை யிலேயே எதிர்த்து வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு அவையில் இரு ந்து வெளியேறினார். அவ ருடன் அதிமுக. எம்.எல். ஏ.க்க ளும் வெளிநடப்பு செய்த னர். கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் தான் தேர்தல் நடந்தது. இப்போது பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப் பட்டு இருப்பதால் அவர்க ளுடைய பதவி தானாகவே முடிவடைந்து விடுகிறது.