சென்னை, பிப்.21- சென்னையில் 45வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிறு விடுமுறை என்பதால் சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குழந்தைகளுடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். மழலையர் பாடல்கள், கதைகள், நகைசுவை துணுக்குகள் என பல்வேறு வகையான புத்த கங்களை குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மலர்களின் மகரந்தம் நாடி வரும் தேனீக் களாக சென்னையில் மட்டுமின்றி வெளியூர் களில் இருந்தும் திரளானோர் கண்காட்சிக்கு வந்தி ருந்தனர். கொரோனா ஊரடங்கால் செல்போன், இணையதளம், கேம்ஸ் என வீடுகளிலேயே சிறைப்பட்டு கிடந்த குழந்தைகள், இந்த கண்காட்சியை கண்டு குதூகலித்தனர். (மேலும் செய்தி 5)