tamilnadu

img

‘ப’ வடிவில் இருக்கைகள்  சென்னை

‘ப’ வடிவில் இருக்கைகள்  சென்னை

: தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில்  இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப் பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலை யில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி களின் வகுப்பறைகளிலும் ‘ப’ வடிவில் இருக்கைகள்  அமைக்க வேண்டும். ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைப்பது கற்றல் திறனை மேம்படுத்தும் என்பதால், இந்த  புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறி யுள்ளார்.