ஆக்கூரில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, மே 10- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள ஆக்கூர் முக்கூட்டில், தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செம்பனார் கோவில் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த விஜயகுமார் வரவேற்றுப் பேசினார். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளரும், தஞ்சை மண்டல பொறுப்பாளருமான பி.எம். ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ. நிவேதா முருகன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, அருள்தாஸ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன் நன்றி கூறினார்.