tamilnadu

img

தஞ்சை அரசு மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கை, கால்கள்

தஞ்சாவூர், ஜூலை 3- தமிழகத்திலேயே செயற்கை கால், கைகள் உற்பத்தியில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது என மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரவிக்குமார் தெரிவித்தார்.  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், 14 மாற்றுத் திறனாளிகளுக்கு, இலகுரக நவீன செயற்கைக் கால்கள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை தலைவர் மரு.குமரவேல் வரவேற்றார். தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ரவிக்குமார், 14 பயனாளிகளுக்கு முத லமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். இந்த செயற்கைக் கால்கள் அனைத் தும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதற்கான அனைத்து உபகரணங் களும் மருத்துவக் கல்லூரியில் இயங்கும் செயற்கை அவயங்கள் உருவாக்கும் நிலையத்தில் செய்யப்பட்டவை. இவை கடந்த இரண்டரை மாதங்களாக இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற் போது வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 75 ஆயி ரம் மதிப்பிலானது.  தற்போது செயற்கைக் கால் உபகரணங்கள் ஒருவருக்கு 3 நாளிலேயே பொருத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை நிபுணர்கள் பாலமுரளி, ரமேஷ், முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழி யர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் பேசுகையில், “தஞ்சை மருத்துவக்கல்லூரி மூலம் இதுவரை 139  பேருக்கு செயற்கை கால் மற்றும் கைகள்  வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேருக்கு செயற்கை கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 31 செயற்கை கால்கள், தஞ்சை மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே தயார் செய்து பொருத்தப்பட்டுள்ளன. மீத முள்ள உபகரணங்கள், வெளி இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டவை. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உற்பத்தி செய்து தற்போது 3 ஆவது முறை யாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தி லேயே தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைதான் செயற்கை கை, கால்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கை,  கால் போன்ற அவயங்களை இழந்த வர்கள் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை புறநோயாளிகள் பிரிவை அணுகலாம்” என்றார்.

;