tamilnadu

img

விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காத்திடுக!

கோவை,ஜன.27-  விசைத்தறி உரிமையாளர் கள் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு விவகாரத்தில் உட னடியாக தலையிட்டு அவர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன், தமிழக முத லமைச்சருக்கு கடிதம் வாயிலாக வலி யுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங் களில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறை முகமாகவும்  சுமார் 2 லட்சம்  தொழிலாளர் கள்  பணிபுரிந்து வருகின்றார்கள். நாள் ஒன்றுக்கு 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

அதற்கான கூலி யை குறிப்பிட்ட காலத்திற்கு ஜவுளி வியாபாரிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு நிர்ணயம் செய்து வழங்கப்படுவது நடைமுறையாகும்.  ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும், அந்த  கூலி உயர்வை வழங்குவதற்கு ஜவுளி  உற்பத்தியாளர்கள் மறுத்து வரு கின்றார்கள். கடந்த 7 ஆண்டு களுக்கு மேலாக விசைத்தறிக் கான கூலி உயர்வு கிடைக்காத தால், வாங்கிய கடனை செலுத்த  வழியின்றி பரம்பரை சொத்துக் களை விற்று விசைத்தறியாளர்கள் தவித்து வருகிறார்கள். தொழி லாளர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் கடனில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

இச்சூழலில் 2017ஆம் ஆண்டு கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் 24-11-2021ம் அன்று மாநில  அமைச்சர்,  கோவை,  திருப்பூர்  மாவட்ட  ஆட்சியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி 23 சதவீத கூலி உயர்வு என அரசு அறி விப்பு வெளியிட்டது. ஆனால் இது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்த கூலி உயர்வை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள் மாநில அரசுக்கு  சவால் விடுகின்ற வகை யில் ஒப்பந்தத்தை அமலாக்காமல் கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் தேவையற்ற சட்ட-ஒழுங்கு பிரச்சனையை உரு வாக்குகிறார்கள். ஆகவே தாங்கள் தலையிட்டு அமைச்சர்  முன்னிலையில்  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;