சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குக
சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் மாவட்டத் தலைவர் டி. அமுதா தலை மையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர், முனைவர் கா. பால்பாண்டி, முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆ. பெரியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா ளர் கே.எம். ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் ஐ. அல்போன்சா நடைபெற்ற பணிகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். கூட்டத்தில், சமையல் உதவியா ளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு ஊதிய உயர்வு, முறை யான பணியிட மாறுதல்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம்(சத்துணவு) முறையீடு செய்வது, காலமுறை ஊதியம், ஓய்வூதி யம், பணிக்கொடை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கை யான தேர்தல் கால வாக்குறுதியை நிறை வேற்றக் கோரி சென்னையில் நடைபெற வுள்ள கருப்பு உடை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற் பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா ளராக எம்.சந்திரா, தலைவராக டி. அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.