tamilnadu

img

சமூக அறிவியல் ஆய்வுக்கு முக்கியத்துவம் தருக!

சென்னை, அக். 28- சமூக அறிவியல் ஆய்வுக்கு மாண வர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மலைமக்கள் ஆய்வரங்கில் பேராசிரியர்கள் வேண்டு கோள் விடுத்தனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, தொலைதூரக் கல்வி நிறு வனம் சார்பில் பேராசிரியர் சற்குண வதியின் “மலைமக்கள் ஆய்வின்” அடிப்படையில் “மலைவாழ் மக்கள் - ஆய்வின் தேவையும் அவசியமும்” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் சென்னையில் வெள்ளியன்று  (அக். 28) நடைபெற்றது.

திறமைமிக்கவர்கள் 

சென்னைப் பல்கலைக்கழக பதிவா ளர் ச.ஏழுமலை தலைமை தாங்கி பேசு கையில், “மலை மக்கள் வாழ்வியல் முறையே வேறு. விட்டுக்கொடுக்கும் மனோபாவம் கொண்டவர்கள். பிற ருக்கு உதவி செய்யும் குணம் படைத்த வர்கள். அவர்கள் மருத்துவ ஞானம் பெற்றவர்கள். அந்த பெண்கள் இதுவரை சிசேரியன் செய்து குழந்தை பெற்றதில்லை. பிரசவ காலத்திற்கு 3 நாட்கள் முன்பு மூலிகைகள் கலந்த எண்ணெய் தடவிக் கொள்கிறார்கள். பின்னர் சுகப்பிரசவத்தில் குழந்தை ஈன்றெடுக்கின்றனர். மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மருத்துவத்திற்காக மருத்துவ மனைக்கு செல்வதில்லை. அவர்கள் சொந்த மருத்துவத்தையே மேற்கொள் கிறார்கள். ஏதேனும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை என்றால்தான் அந்த பகுதியில் உள்ள ராணுவ சிகிச்சை மை யத்திற்கு செல்கிறார்கள். `ஹிமாலயா நிறுவனம் 240 தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. ஆனால் அதற்குண்டான 73 விழுக்காடு மூலப் பொருட்களை வழங்குவது இந்த பழங்குடியின மக்கள்தான். வில் அம்பு எய்துவதில் மிகவும் திறமை பெற்றவர்கள் நாகா இன மக்கள். எனவே அரசும், கல்வியாளர்களும் அவர்களை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

தொடர் தேடுதல் அவசியம்

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மேலாண்மை இயக்குநர் சீ.சுரேஷ்குமார் பேசுகையில், மாண வர்கள் தங்கள் துறை சார்ந்த படிப்புடன் நின்று விடாமல், சமூகம் சார்ந்த விஷ யங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். விளிம்பு நிலை மக்களை தெரிந்து கொள்வதன், பயில்வதன் மூலம் சிறந்த நிர்வாகியாக செயல்பட முடியும். புதுப்புது விஷயங் களை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

வாசிப்பு பழக்கம் 

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர் வே. ஜெயஸ்ரீ பேசுகை யில், நாகரீகம் எட்டிப்பார்க்காத பகுதி யில் ஆய்வு மேற்கொள்வதென்பது மிகவும் கடினமானது. செல்போன், டிவி இல்லாத மலை மக்களின் வாழ்வி யல் முறை, கூர்நோக்கு சிந்தனை, குடும்ப கட்டமைப்பு ஆகியவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. வாசிப்பதன் மூலம் வரலாறு, வாழ்வியல் முறை  உள்ளிட்ட பலவற்றை தெரிந்து கொள்ள முடியும். மனிதம் காக்கும் பணியில் மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

கள ஆய்வின் அவசியம்
சென்னை பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் பேரா சிரியர் மா.தமிழரசன் பேசுகையில், மனித உறவுகளின் கட்டமைப்புதான் சமூகம். இதில் மலைவாழ் மக்களும் அடங்குவர். அறிவியல் ஆராய்ச்சி என்பது 4 சுவர்களுக்குள் நடப்பது. ஆனால் சமூக ஆய்வு என்பது 4 சுவர்களை தாண்டி வெளியே சென்று நடத்துவது. மலை கடந்து பாதையற்ற இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்வதாகும். வளர்ச்சி, முன்னேற்றம், சமூக முன் னேற்றம் இதுகுறித்த எந்த ஒரு ஆராய்ச்சியானாலும் சரி, அது சமூக  முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும். ஆராய்ச்சியின் முடிவில், மக்கள் இறுதிக்கட்ட பயனாளிகளாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்றார்.

மலை மக்களின் மருத்துவப்பயன்பாடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன இயக்கு நர் பேராசிரியர் எஸ்.அரவிந்தன் பேசுகையில், அறிவியல் சார்ந்த ஆய்வு, மொழி சார்ந்த ஆய்வு என ஆய்வுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மனிதர்கள் அனைவரும் பழங்குடிகளாக இருந்து நாகரிகம் அடைந்தவர்களே. நாகரிகம் அடை யாத, பொருளாதாரத்தில் பின் தங்கி யுள்ள மலைவாழ், பழங்குடியின மக்கள் மலைகளில் வாழ்கிறார்கள். மலைவாழ் மக்கள் குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் மானுடவியல், சமூக வியல் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளை சேர்ந்தவர்களே ஆய்வு மேற்கொள்கின்றனர். பண்பாட்டு சார்ந்தும், மொழி சார்ந்தும் தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மலைவாழ் மக்கள் குறித்து பொரு ளாதாரம், அரசியல் அறிவியல், வணி கவியல், வரலாறு, குற்றவியல், புவி யியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களும் ஆய்வு மேற்கொ ள்ள வேண்டும். மருத்துவத்துறை சார்ந்த அறிஞர்கள் மலைவாழ் மக்க ளின் மருத்துவம், மூலிகை பயன்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்விய லையும் ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய அறிவியல் யுகத்திற்கு அந்த  மக்களை அழைத்து வர ஆய்வுகள் பயன்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆய்வுக்கான நிதி குறைவு

சென்னைப் பல்கலைக்கழக சமூகப்பணித் துறை தலைவர் பேராசிரி யர் இரா.பாஞ்சாலன் பேசுகையில், சரியான முடிவெடுக்க ஆய்வுகள் மிக மிக அவசியம். ஆய்வுக்காக இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்கு கிறது. ஆனால் பிற நாடுகள் ஆய்வு களுக்காக கூடுதல் நிதி ஒதுக்குகின் றன. பணமதிப்புநீக்க நடவடிக்கை எந்த  ஆய்வும் மேற்கொள்ளாமல் திட்டமிடா மல் அறிவிக்கப்பட்டதால் ஏராளமா னோர் அவதிப்பட்டனர். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடை ந்து வருகிறது. கேட்டால் டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம் என்ற ஆய்வு இல்லா ததால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள இதுபோன்ற பதில் அளிக்கப் படுகிறது. உலகளாவிய பசி குறியீட்டில் 120இல் 107ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. சீரான வளர்ச்சியை உரு வாக்காமல் வறுமையை ஒழிக்க முடி யாது. மலைவாழ் மக்கள் குறித்த உரிய  ஆய்வுகள் இல்லை. ஒன்றிய அரசு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் சமூக அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே சமூக அக் கறையோடு அதற்குண்டான ஆய்வு களை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக கரிம வேதியியல் துறைத் தலைவர் பேரா சிரியர் கு.ரவிச்சந்திரனும் ஆய்வுரை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தகைசால் பேராசிரியர் முனைவர் மு.சற்குணவதி வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நா.மோகன் குமார் நன்றி  கூறினார். ஏராளமான பேராசிரி யர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.