tamilnadu

பிப்.16-க்குள் குறைகளை உயர்மட்டக்குழுவிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

புதுதில்லி,ஜன.29- ரயில்வே தேர்வர்கள் மற்றும் தேர் வெழுத விரும்புவோரின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வோம் என்றும் பிப்ரவரி 16-க்குள் குறைகளை உயர் மட்டக்குழுவிடம் மாணவர்கள் சமர்ப் பிக்குமாறு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள் ளார். இதுகுறித்து தொலைக்காட்சி உரை யாடலில் அவர் கூறுகையில், ரயில்வே  ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி நடத்திய தேர்வு  குறித்து சில விண்ணப்ப தாரர்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து பதிலளித்தார்.இந்த விவகாரம் மிகுந்த கவனத்துடன் கையாளப்படும் என்றும்  இதற்காக அமைக்கப்பட்ட மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர் நிலைக் குழு, தேர்வர்களின் கருத்துகளை ஏற்கனவே பெறத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய மூத்த அதிகாரிகள் மாணவர் குழுக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப்  பெறுகிறார்கள். தேர்வர்கள்/மாணவர்க ளின் அனைத்துப் பிரச்சனைகளும் மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்படும் . யாருடைய வார்த்தைகளாலும் குழப்பமடையவோ அல்லது பாதிப்படையவோ தேவை யில்லை. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.  ரயில்வே உள்கட்டமை ப்பு என்பது பொதுச் சொத்து என்பதால், சாலை மறியலோ, ரயிலை எரிக்கவோ, தீ வைக்கவோ தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். தேர்வர்களின் கவலைகள்/குறைக ளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் பரந்த அனுபவமுள்ள மிக மூத்த அதிகாரிக ளைக் கொண்டது.  சம்பந்தப்பட்ட மாண வர்கள்/தேர்வர்கள் தங்களின் குறை கள்/கவலைகளை மூன்று வாரங்களுக் குள் அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதிக் குள் குழுவிடம் சமர்பிக்குமாறும், அதன் பிறகு உடனடியாகத் தீர்வு காண்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.