tamilnadu

img

தேர்தல் பத்திரம் பெறுவதும் ஊழலின் ஒரு பகுதி தான்

ஜிந்த், (ஹரியானா), செப்.24- அரசியல் சட்டத்தின் மீது பாஜக வுக்கு எந்த மரியாதையும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்  பினர் பிரகாஷ்காரத் கூறினார். ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்  டத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- மக்களின் வாழ்வாதாரம் மீது பாஜக நடத்திவரும் கொடூரத் தாக்கு தல்கள், ஜனநாயகத்தை சீரழிப்பது,  ஜனநாயக உரிமைகள் மீறல், மதச்  சார்பின்மை உள்ளிட்ட பிரச்சனை களில் பாஜகவின் அணுகுமுறையை  கடுமையாக விமர்சித்த பிரகாஷ் காரத், அதானி, அம்பானிகளுக்காக  உழைக்கும் மோடி அரசை 140 கோடி  மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.  நாட்டின் அரசியலமைப்பின் மீது பாஜகவுக்கு மரியாதை இல்லை. கூட்டுக் களவாணி முதலாளிகளின் நலன் சார்ந்த முடிவுகளை மட்டுமே மோடி அரசு எடுக்கிறது. தேர்தல் பத்திரம் பெறுவதும் ஊழலின் ஒரு பகுதி தான். சிபிஐ, அமலாக்கத்துறை, வரு மான வரித்துறை, தேர்தல் ஆணை யம் ஆகியவற்றை ஜனநாயகம், அர சியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மீதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் மீதும் ஒன்றிய அரசு தவ றாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளின் அரசுகளை சீர்குலைப்பதற்கு இந்த அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.

பாஜக ஆட்சியில் பொய் மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் ஏராளமானோர் சிறையில் அடைக் கப்படுகின்றனர்.  மூன்று விவசாய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தை நடத்திய விவ சாயிகள் 2024-ஆம் ஆண்டு மக்க ளவைத் தேர்தலில் மக்கள் விரோத  பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றார். ஹரியானாவில் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்  தங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கட்சியின் மாநி லச் செயலாளர் சுரேந்தர் சிங், விவ சாயிகள், தொழிலாளர்கள், ஊழி யர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அரசின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு தக்க பதிலடி கொடுக்க தயா ராகிவிட்டனர் என்றார்.

;