மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு இடமில்லை!
சென்னை, ஜூன் 28- “மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இட மில்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை திமுக நடத்துகிறது. இத னையொட்டி, திமுக தலைவர் என்ற முறையில் அக்கட்சியின் தொண்டர் களுக்கு கடிதம் ஒன்றை முதல்வர் எழுதி யுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டுக் கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிரா கரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினை யை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோ கிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகை யில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெ டுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள் ளார். மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ், 234 தொகுதிகளிலும் 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக் குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, வீடு, வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து நமது அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பம் பெற்ற பயன்களை உறுதி செய்யும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.