tamilnadu

img

‘பாக்ட்’ உரம் ‘பாஜக உரம்’ ஆனது; மூட்டைகளுக்கும் காவிமயம்

பாக்ட்(FACT) தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ரசாயன உரத்தையும் பாஜக என மாற்றி காவிமயமாக்கி விட்டது ஒன்றிய அரசு. 75 ஆண்டுகளாக விவசாயி கள் பயன்படுத்திய ‘பாக்ட்’ உரங்களின் பெயரை காவிமயமாக்கி ‘பாஜக’ என பெயர் சுருக்கம் வரும் வகையில் ‘பிரதான் மந்திரி பாரதிய ஜனுர்வரக் பர்யோஜனா’ (பிரதமரின் பொது உரத் திட்டம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. பாக்ட் இல் உற்பத்தி செய்யப்படும் சுமார் 10 உரங்களில் ‘பாரத்’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டுள்ளது. பையின் மேல் மூவர்ணப் பட்டை. பையின் நடுவில் பெரிய எழுத்துக்களில் ‘பிரதான மந்திரி பாரதிய ஜனுர்வரக் பர்யோஜனா’ என்று ஆங்கிலத்தில் மூன்று அடுக்கு களில் எழுதப்பட்டுள்ளது. முதல் பார்வையில் ‘பாஜக’ என்று தவறாகப் புரிந்துவிடும். அதற்குக் கீழே காவி வண்ணத்தின் பின்னணியில் உரத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இரண்டு யானைகளின் தும்பிக்கைகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வண்ணம், FACT என ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதப்பட்ட படத்துடன் உரங்கள் ஒரே சீராக வெளியிடப்பட்டன. இப்போது யானை படம் பையின் அடிப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே இருந்ததை, கல்வியறி வற்றவர்களும் கூட ஒரே பார்வையில் அடையாளம் காண முடியும். இந்த வாய்ப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாயச் செழுமைக்கு உரம் பெரும் பங்காற்றியுள்ளது என்ப தற்கும் பிரதமருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உரத்தையும் காவி ஆக்கி அரசி யல் லாபம் அடைய முயற்சி நடக்கிறது. ‘ஒரு நாடு ஒரு உரம்’ திட்டத்தின் கீழ் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாக்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் ஜூன் மாதத்தில் அறி விக்கப்பட்டு அக்டோபரில் செயல் படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள விவசாயி களுக்கு பாக்ட் உரம் 50 சதவிகிதம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்த உரத்தை பா.ஜ.க.வும், பிரதமரும் கொடுத்தது போல் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். “இந்தியா” என்ற பெயரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்றுக்கொண்டபோது, இந்தியாவின் பெயரையே பாரதம் என மாற்றியவர்கள், பாஜகவை வளர்க்க பொதுத்துறை அமைப்பின் தயாரிப்பை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.