tamilnadu

பிளஸ் 1 தேர்வு ரத்து; 8 வரை கட்டாயத் தேர்ச்சி வரவேற்கத்தக்கது

பிளஸ் 1 தேர்வு ரத்து; 8 வரை கட்டாயத் தேர்ச்சி வரவேற்கத்தக்கது

தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்துப்போகும் திட்டங்களை நீக்குக!

சென்னை, ஆக. 13 - மாநில அரசின் கல்விக் கொள்கையில்  பாராட்டத்தக்க அம்சங்கள் இடம்பெற்றிருக் கும் அதேநேரத்தில், தனியார் மற்றும் வகுப்பு வாத அமைப்புகளுக்கு சாதகமான அம்சங்க ளும் இடம்பெற்றுள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றைக் களைய வேண்டும் என்றும் இந்திய மாணவர்  சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செய லாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக கூறப் பட்டிருப்பதாவது:

பட்டியல் வகுப்பு - பழங்குடியினர், சிறப்புக் குழந்தைகள் மீது கவனம் 

'இந்தியாவின் பொதுக் கல்வியை சிதைக்கச்  செய்யும் ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020-க்கு மாற்றாக, மாநி லத்திற்கு என தனிக் கல்விக் கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு கடந்த 2022-இல், ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமை யில் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது.  இந்த குழு இறுதி செய்த அறிக்கையை மாநில அரசிடம் 2024 ஜூலையில் ஒப்படைத்த னர். மாநில அரசு கடந்த ஆகஸ்ட் 8 அன்று  அந்த கொள்கையை பகிரங்கமாக வெளி யிட்டு இருக்கிறது. 83 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், கல்வியில் பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியல் இனத்தவர், பழங்குடியி னர், சிறப்பு தேவை உடைய குழந்தைகள், முதல்  தலைமுறை கற்பிப்போர் -   இவர்களுக்கு தனிக் கவனமும் முன்னுரி மையும் வழங்கப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்க கட்டாயத் தேர்ச்சி; பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து;

மேலும், மாநில கல்விக் கொள்கையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே  கற்பிக்கப்படும் என்ற மாநிலத்தின் இரு  மொழிக் கொள்கை, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, 1 ஆம் முதல் 8 ஆம் வகுப்பு வரை  கட்டாய தேர்ச்சியை உறுதிப்படுத்தியது ஆகி யவை வரவேற்கத்தக்கன. மேலும், இக்கல்விக் கொள்கையின் படி,  கல்வி என்பது முழுவதும் நவீன மயமாக்கப்பட்டு  தொழில்நுட்பங்களுடன் கூடிய மேம்படுத்தப் பட்ட கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும்; தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பிக்கும் திறனை நவீன மயமாக்குதல், தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது ஆகியனவும் தற்போ துள்ள தொழில்நுட்ப உலகில்  தேவையான ஒரு சிறப்பம்சம் ஆகும்

. பள்ளிகளை பிரிக்கும் திட்டம்  சமச்சீர் கல்விக்கு எதிரானது

அதேநேரம், மாநிலக் கல்விக்  கொள்கையில், மாதிரி பள்ளி  எனவும், தகைசால் பள்ளி எனவும், பள்ளிகள்  தகுதி அடிப்படையில் பிரிக்கப்படும்; முதல்  மதிப்பெண் எடுத்த மாணவர்களை தனியாக  பிரித்து அவர்களுக்கென ஒரு கல்வி வழங்கப் படும் என்பது, சமூகத்தில் கல்வியில் பிரி வினையை ஏற்படுத்தும்; சமச்சீர் கல்வி கோட்பாட்டின் நோக்கத்தை சிதைப்பதாக அமையும். இது சரியானது அல்ல.  எனவே, இந்த அம்சத்தை தமிழ்நாடு அர சாங்கம் கல்விக் கொள்கையில் இருந்து நீக்க  வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத தொண்டு  நிறுவன ஊழியர்கள் பாடங்களை நடத்தலாம்  என குறிப்பிடப்பட்டிருப்பது, கல்வியில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும்  இது, ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020-இன் ஓர்  சாராம்சமாகும். எனவே ஆசிரியர் அல்லாத பிறரை கல்வி நிலையங்களுக்குள் அனுமதிப்பது  ஒரு தவறான செயலாகும். எனவே தொண்டு நிறுவனங்கள் மூலமான நிதித் திட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் கைவிட வேண்டும்.  கல்விக்கு 10 சதவிகிதம் நிதியை அரசே ஒதுக்க வேண்டும் அந்தந்த பள்ளி நிர்வாகமும், பள்ளி மேலாண்மை குழுவும் இணைந்து பழைய மாணவர்களிடமிருந்து நிதி பெற்று, பள்ளி நிர்வாகங்களை மேற்கொள்ளலாம் என்பது சாத்தியமானதும், பொருத்தமானதும் அல்ல. கல்விக்கான நிதி என்பது மாநில உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 10 சதவிகிதம் ஆண்டு தோறும் ஒதுக்குவதை தமிழ்நாடு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். தேர்வு குறித்தும் மறுமதிப்பீடு குறித்தும் பல்வேறு மாற்றங்களை தமிழ்நாடு அர சாங்கம் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மதிப்பீடு கள் மனப்பாடத்தின் அடிப்படையில் இல்லா மல் பாடங்களின் புரிதலில் இருந்தும், கருத்து உள்ளடக்கத்திலிருந்து பாடத்தின் மதிப்பீடுகள் அமையும் என்பது வரவேற்கத் தக்கது. இருப்பினும் 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு எந்தவித நுழைவுத் தேர்வுகளும் இருக்காது என குறிப்பிடவில்லை. நுழைவுத் தேர்வு குறித்தான பார்வை மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெறாமல் உள்ளது. அது தெளிவுபடுத்தப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்துப்போகும் திட்டங்கள் கூடாது மாணவர்களை அரசியலாகவும் சமூக  அக்கறையுடனும் மேம்படுத்த, அவர்களுக் கான மாணவர் மன்றங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தாலும்கூட, கடந்த காலங்களில் இருந்த ஜனநாயக முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி நாடாளு மன்றம் மற்றும் மாணவர் பேரவை தேர்தல் குறித்து எந்தவித அறிவிப்புகளையும் இதில்  குறிப்பிடவில்லை. மாணவர் பேரவை தேர்தல்களை தவிர்த்து விட்டு மாணவர்களை அரசியல் படுத்துவதும், சமூக அக்கறை உடைய மாணவர்களாக வளர்த்தெடுப்பதும் ஆய்வுப்பூர்வமாக சாத்தியமானதல்ல. மாநிலக் கல்விக் கொள்கையில் காணப்படு கிற, தனியார் மற்றும் வகுப்புவாத அமைப்பு களுக்கு சாதகமான அம்சங்களை- தேசிய  கல்விக் கொள்கையை ஒத்த சில திட்டங்களை,  தமிழ்நாடு அரசு களைவதுடன்  கல்வியாளர் கள் மற்றும் மாணவர் அமைப்புகள் வலியுறுத்து கிற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.