tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

தயவு செய்து..

பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மாதங்களில் 34 காவல்துறை - குற்றவாளிகள் மோதல்கள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 11 சம்பவங்கள் காவல்துறையின் பிடியில் இருக்கும்போது நடந்தன என்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசிடம், மோதல் கொலைகள் பற்றிய அறிக்கையைக் கேட்டுள்ளது. இரண்டு மாத காலம் ஆகியும் இது வரையில் அறிக்கை தரவில்லை. இந்த மோதல்க ளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 45 பேருக்குக் காயம் ஏற்பட்டது. கடந்த நான்காண்டுகளில் 319 குற்றவாளிகளைக் காவல்துறை சுட்டுப்பிடித்தது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த விபரங்களை விரிவாக எழுதி அனுப்புவோம் என்று பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவர் கவுரவ் யாதவ் கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்களோ, “தயவு செய்து விசாரியுங்கள்” என்று நீதிமன்றக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமையின் தயவில்..

உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி, தனது பதவியில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய விருக்கிறார். பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சிக் காரர்களே இவர் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அதையும் மீறியே இவர் முதலமைச்சரா கத் தொடர்கிறார். உணவகத்தின் வரவேற்பறை நிர் வாகி அங்கித் பண்டாரி, சீனாவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்ட திரிபுராவின் அஞ்செல் சர்மா ஆகியோ ரின் கொலைகள் அரசின் மீதான கரும்புள்ளிகள் என்று கூறப்படுகிறது. இவற்றில் முறையான விசார ணையை அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.முதலமைச்சரோ, இவையெல்லாம் கவ னிக்க வேண்டியவையே அல்ல என்பது போல இருக் கிறார். அவரைப் பொறுத்தவரையில், தில்லியில் உள் ளவர்கள் கோபப்படக்கூடாது. அவர்களது தயவில் பதவிக்காலம் நகர்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போவதால், கட்சிக்காரர்களே இவரை மாற்ற மாட்டார்களா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

பாஜகவின் தயவில்..

சிறைக்குப் போகாமல் இருக்க பாஜகவின் உதவியோடு வெளி நாடு சென்றதாக விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது ஏராளமான வழக்குகள் நடந்து வருகின்றன. தப்பி யோடி பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அந்த விசா ரணையின்போது, இந்தியாவுக்கு எப் போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்வி யை நீதிபதிகள் எழுப்பினர்.  ஒன்று இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டும் அல்லது நான் திரும்பி வர மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக சொல்லி விட வேண்டும் என்றனர். வரும் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம் என்று விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் கூறி யிருக்கிறார். இங்கிலாந்தில் நடக்கும் வழக்குகளை அவர் காரணம் காட்டியுள்ளார். மேலும், பயணத்திற்குத் தேவையான எந்தவித ஆவ ணமும் தனது கட்சிக்காரரிடம் இல்லையென்றும் வழக்கறிஞர் கூறினார்.

தயவு பார்க்காமல்..

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. உடனே, பாதுகாப்பு ஏற்பாடுகளுக் காக சோதனைகள் நடத்தப்பட்டன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) பிரகாஷ் சர்மாவே நேரில் வந்து சோதனைகளைப் பார்வையிட்டார். அதே வளாகத்தில் மேலும் பல சார்பு நீதிமன்றங்களும் உள்ளன. அவற்றைச் சோதனையிடும்போது, எட்டு நீதிபதிகள் வேலை நேரத்தில் பணியில் இல்லை என்று பார்த்தார். அவர்கள் அனைவரையும் வேறு பணிக்கு மாற்றுவது என்றும், அதற்கான ஆணை வரும்வரையில் அவர்களுக்கு வழக்கு விசாரணை ஒதுக்கக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. தயவு பார்க்காமல் இப்படியொரு நடவடிக்கை ராஜஸ்தான் நீதித்துறையில் இதுவரையில் எடுக்கப்பட்டதில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இன்னும் சில நாட்களுக்காவது வழக்குகள் வேகமாக விசா ரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.