அதானியை தொடர்ந்து அம்பானி ரூ.10 லட்சம் கோடி முதலீடு
தில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சர்வதேச மாநாடு நடை பெற்று வருகிறது. 5 நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி திங்களன்று மாலை தொடங்கி வைத்தார். வெள்ளியன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இந்த ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் - ஜியோ) ரூ.10 லட்சம் கோடி முதலீடு தொடர்பான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநாட்டு அரங்கில் அவர் பேசுகையில்,”செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) சிறந்த பயன்கள் இன்னும் வரவிருக்கின்றன. இது மனித குலத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளமான ஒரு காலத்தை ஏற்படுத்தும். இதனால் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இணைந்து அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யும்” என அம்பானி தெரிவித்தார். முன்னதாக, ஏஐ மாநாடு தொடங்கிய 12 மணிநேரத்தில் (செவ்வாய்கிழமை காலை) பிரதமர் மோடிக்கு மிக நெருக் கமான அதானி ஏஐ துறையில் சுமார் ரூ.9 லட்சம் கோடி முதலீடு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
