states

“மம்தா பானர்ஜி செய்தது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம்”

“மம்தா பானர்ஜி செய்தது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம்”

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரூ.2,742 கோடி நிலக்கரி கடத்தல், அதனுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி யாக, ஜன., 8 அன்று கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் அரசியல் ஆலோ சனை நிறுவனமான ஐ-பேக் அலுவல கம்  மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடந்துகொண்டிருந்த போதே, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இசட் பிளஸ் பாதுகாப்பு வளை யத்துடன் அந்த இடத்திற்கு நேரடியாகச் சென்றார். சில ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மம்தா பானர்ஜி - அம லாக்கத்துறை இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்  தாக்கல் செய்த மனு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. வாதத்தின் போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு அத்துமீறி நுழைந்தது “மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம்” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரி வித்துள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு புலனாய்வு அமைப்புகளைத் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒரு “ஆயுத மாகப்” பயன்படுத்துவதாக மேற்கு வங்க அரசு வாதிட்டது.  இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 18க்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.