நவிடைர் செயலிழப்பு முடங்கியது விமான சேவை
நவிடைர் (Navitaire) என்பது விமான நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப சேவை வழங்கும் (விமான முன்பதிவு, புறப்பாடு கட்டுப் பாட்டு) நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஸ்பெயின் நாட்டின் உலகப்புகழ் பெற்ற அமெதியஸ் (Amadeus) குழுமத்திற்கு சொந்தமானது ஆகும். இந்நிலையில், நவிடைர் செயலி ழப்பால் இந்தியா உட்பட ஆசிய-பசிபிக் மற்றும் ஐரோப்பிய விமான சேவைகள் வியாழனன்று விமான சேவைகள் கடு மையாகப் பாதிக்கப்பட்டன. ஏர் இந்தியா தவிர இந்த அமைப்பைப் பயன்படுத்தும் மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வியாழனன்று காலையில் பெரும் பாதிப்பைச் சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமான சேவைகள் காலை 6:45 முதல் 7:28 வரையிலும், பின்னர் மீண்டும் 8:10 முதல் 8:25 வரையிலும் முடங்கின. செக்-இன், போர்டிங் நடை முறைகளில் தாமதம் ஏற்பட்டது. தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலை யத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப் பட்டது. மற்ற விமான நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. நவிடைர் முடங்கியபோது, விமான நிறுவனங்கள் மேனுவல் முறையைப் பயன்படுத்தி பயணிகளை அனுமதித் தன. வியாழனன்று மதியத்திற்கு மேல் விமான சேவைகள் நிலைமை சீராகிய தாக செய்திகள் வெளியாகியுள்ளன.