tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை: ஆசிரியர் கைது

தூத்துக்குடி, அக்.4- தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி யில் செயல்படும் தனியார் மெட்ரிக். பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி யாற்றியவர் மணிகண்டன் (35). செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங் குளத்தைச் சேர்ந்த இவர், இதே பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக பள்ளி நிர்வாகம் அண்மையில் நீக்கியது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை மணிகண்டன் கர்ப்பமாக்கி யது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், மணிகண்டன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குலசையில் நிறமிகள் சேர்க்கப்பட்ட  உணவுப்பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி, அக். 4- தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவ லர் டாக்டர் அருண் தலைமையில்  உணவு பாதுகாப்பு துறையினர் உணவ கங்கள், அன்னதானம் மையங்கள் மற்றும் தின்பண்டங்கள் பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை களில் இருந்து செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.