tamilnadu

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜூலை 16 -  கும்பகோணத்தைச் சேர்ந்த பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் குடந்தை அரசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில், பெரியார் உணர்வாளர்களின் கூட்ட மைப்பு சார்பில் கும்பகோணத்தில் உள்ள எஸ்இடி மகாலில் ஹைட்ரோகார்பன் திட் டத்திற்கு எதிரான உள் அரங்கக் கூட்டம் மாநா டாக நடைபெற உள்ளது. நண்பகல் இரண்டு மணிக்கு துவங்கும் இந்தக்கூட்டம் இரவு 10 மணி வரை நடைபெறும். ஜூலை 21-ஆம் தேதி அல்லது அனுமதி அளிக்கும் நாளில் நடத்த திட்டுமிட்டுள்ளோம். இந்த கூட்டத்திற்கு அனுமதி மற்றும் காவல் துறை பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்து, உரிய உறுதி மொழி வழங்கினேன். கும்பகோணம் காவல் ஆய்வாளர், கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, பேச்சுரிமை, அடிப்படை உரிமையின் அடிப்படையில் கூட் டத்திற்கு அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இது குறித்து கும்பகோ ணம் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார்.

;