tamilnadu

சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுதில்லி, டிச.4-  குஜராத் மாநிலத்தில் ஒருவ ருக்கு ஒமைக்ரான் பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் பாதிப்பு மூன்றாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவர் இந்த வைரசால் பாதிக்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது.  இந்த நிலையில், ஜிம்பாப்வே யில் இருந்து குஜராத்தின் ஜாம்நக ருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து, அவரது மாதிரிகளை, மர பணு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில், அவர் ஒமைக்ரான் தொற் றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதை குஜராத் சுகாதார ஆணையர் ஜெய் பிரகாஷ் ஷிவ்ஹரே உறுதிப் படுத்தியுள்ளார். ஓமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப் பூசிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். பூஸ்டர் டோஸ் அளிப்பதன் அவசியத்தை ஆராய ஒன்றிய அரசு கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத் துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத்திற் கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட உயிரி ழப்புகளைக் கருத்தில் கொண்டு,  சுகாதாரக் உள்கட்டமைப்பை வலுப் படுத்த வேண்டும், படுக்கைகள் போது மான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் சிலிண் டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந் துகளை போதுமான அளவு வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பை வலுப் படுத்துவதில் அரசு நேரத்தை செல வழிக்க வேண்டுமென சுட்டிக்காட்டி யுள்ளது. கொரோனாமுதல் அலை (செப் டம்பர் 2020-ஆம் ஆண்டு உச்சத்தை எட்டியது) பெரும்பாலும் நகர்ப்புறங் களில் பரவியபோதே கட்டுப்படுத்தப் பட்டது. சோதனைகளும் விரைவு படுத்தப்பட்டது. இரண்டாவது அலை (மே மாதத்தில் உச்சம்) பெரும் பாலும் கிராமப்புறங்களில் பரவியது. இதைக் கருத்தில் கொண்டு நாட் டின் கிராமப்புறங்களில் சோதனை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநில அரசின் சுகாதாரத்துறை தொடங்கி கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை ஒரு ஒருங்கிணைந்த தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் நாடா ளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.  கொரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் பதிவாகி வரும் தொற்று எண்ணிக்கையை மிக உன் னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதில் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளவர்களை சரியான நேரத்தில் கண்டறிந்து தனிமைப் படுத்துவது மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள நாடாளு மன்றக் குழு, ஒமைக்ரான் வைரஸ் பர வல் குறித்து உலகசுகாதார நிறு வனம் கவலை தெரிவித்துள்ள நிலை யில் அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது, தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவது, விநியோகத்தை மேம்படுத்துவது மற்றும் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை யை அதிகரிப்பது போன்றவற்றை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளது.

பூஸ்டர் டோஸ் வழங்குதல்

புதிய வைரஸைக் கட்டுப் படுத்த தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் வழங்குவதன் அவசியத்தை மேலும் ஆய்வு செய்யுமாறும் நிலைக்குழு அரசை வலியுறுத்தியுள்ளது. தொற்றின் இரண்டாவது அலையின் போது நாட்டின் வடக்கு -பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தன என்பதை சுட்டிக்காட்டி யுள்ள குழு. வடக்கு-கிழக்கு பகுதி களில் போதுமான சுகாதார வசதி களை மேம்படுத்த உறுதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் ஒன்றிய அரசிற்கு சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில், முதல் அலை யின் உச்சத்திற்குப் பிறகு ஆறு மாதங் களுக்குப் பிறகு இரண்டாவது அலை வந்தது. ஆனால், நாட்டின் சோதனை உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை” என்பதையும் குழு பதிவு செய்துள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப் பட்ட ரூ.64,179.55 கோடியைப் பயன் படுத்துவதற்கான ‘செயல்திட்டம்’ குறித்தும் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படு கிறது. 

தமிழகத்தில்  கொரோனா அதிகரிப்பு

தமிழகத்தில் சென்னை, திரு வள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்க ளில் கொரோனா பாதிப்பு அதி கரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ண னுக்கு மத்திய சுகாதாரத்துறை செய லர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி யுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மூன்று மாவட் டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். வேலூர் மாவட் டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128- ஆக அதிகரித்துள்ள தாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.  சனிக்கிழமை மாலை நான்கு மணி நிலவரப்படி தமிழகத்தில் 4,61,86,282 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2,63,29,671 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை யும் செலுத்திக்கொண்டுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகி யவை பற்றி அரசு அமைக்கும் நிபு ணர்கள் அடங்கிய இரண்டு குழுக் களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
 

;