tamilnadu

img

டேன் டீ நிறுவனத்தை லாபகரமாக இயக்க தனிக்குழு அமைப்பு

உதகை, டிச.1- டேன் டீ நிறுவனத்தை மீண்டும்  லாபகரமாக இயக்க  தனியாகக் குழு  அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளது என உதகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது  நிறுவனங்கள் குழு  தலைவர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்துள் ளார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி, அரவிந்த் ரமேஷ், அருண்மொழிதேவன், தமிழரசி, பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக்குழு உறுப்பினர்கள், குன்னூர் தேயிலை வாரியத்தை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டி உழவர் சந்தையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்த மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  இதையடுத்து உதகையில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணி, சிங்காரா மின் நிலையப் பணிகளை பார்வையிட்டனர். இதன்பின் தமிழக விருந்தினர் மாளிகையில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழக சட்ட மன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா செய்தி யாளர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்து  உள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறை,  மின்சாரத் துறை, சுற்றுச்சூழல் துறை என 3 துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து வருகிறோம். உதகை யில்  ஆதிதிராவிடர் மாணவர் விடுதி  பணிகளை பார்வையிட்டு அடிப்படை  தேவைகளை விரைந்து முடிக்க அறி வுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் உதகை நகராட்சியில் தான் முதல்  முதலில் பிளாஸ்டிக் தடை செய்யப் பட்டது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன் பாடு நீலகிரியில் குறைந்துள்ளது, சிங்காராவில், 150 மெகா வாட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது. இதை  சிறப்பாக நடத்த சில ஆலோசனை களை வழங்கி உள்ளோம். உதகை யை பொறுத்தவரை அடிப்படைத் தேவைகள் சிறப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட நிறுவன (டேன்டீ) பிரச்சனைகளை கேட்டுள்ளோம். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக (டேன் டீ) நிறுவனத்தில் 220 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. எனவே, இந்த நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக இயக்க  தனியாக மார்க்கெட்டிங் குழு அமைத்து ஆய்வு கள் நடத்தப்பட்டு வருகிறது.  என்றார்.

கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

தாயகம் திரும்பிய தமிழர் களுக்காக உருவாக்கப்பட்ட டேன்டீ நிறுவனத்தை வலுப்படுத்தும் வகை யில் தமிழக அரசு, டேன்டீ நிறு வனத்தை புனரமைப்பதற்கும், பொரு ளாதார ஸ்திரத் தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவை  அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அண்மையில் வலி யுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

;