tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘நெல் கொள்முதல் பணி 10 நாளில் நிறைவு பெறும்’

தஞ்சாவூர், அக். 23 - அடுத்த 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து  செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், தஞ்சையில்  200 ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளன. 10 நாள்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என்றார். காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசதி  உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியது போல நெல் மூட்டைகள் நனையவோ அல்லது முளைக்கவோ இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆவின் டெண்டர் முறைகேடு: புகார் மனு தள்ளுபடி!

சென்னை: ஆவின் டெண்டரில் முறைகேடு கள் நடந்துள்ளதாகக் கூறி ஞானசேகரன் என்ப வர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன் றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, ஆவின் பால் விநியோக வாகன டெண்டரில் நிபந்த னைகளை பூர்த்தி செய் யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அர சின் இந்த உத்தரவாத த்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற் கொள்ள ஆவின் நிறுவன த்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.