tamilnadu

img

வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பி. சுதர்ஷன் ரெட்டி

வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பி. சுதர்ஷன் ரெட்டி!

நாட்டை உருவாக்கிய தலைவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற உறுதி

புதுதில்லி, ஆக. 21 - ‘நம் நாட்டை உருவாக்கியவர் களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா’ வை உறுதி செய்யும் வகையில் பணி யாற்றுவேன் என்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் பொதுவேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்த லில், ‘இந்தியா கூட்டணி’யின் பொது வேட்பாளராக போட்டியிடும் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி, மாநிலங்களவைச் செயலாள ரும், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலை நடத்தும் அலுவலரு மான பி.சி. மோடியிடம், வியாழக்கிழ மையன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் மல்லி கார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் வேட்புமனுத் தாக்கலின் போது, உடனிருந்தனர்.

இதனிடையே, மனுத்தாக்கலுக்குப் பின், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நம் நாட்டை உருவாக்கியவர்களால் எதிர் பார்க்கப்பட்ட இந்தியா”வை உறுதி செய்ய பணியாற்றுவேன்” என்று தெரி வித்தார். “குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் என்பது தனி நபர்களுக்கானது அல்ல. நமது நாட்டை உருவாக்கிய வர்கள், இந்தியா என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்  தார்களோ, அதனை உறுதி செய்வ தற்கான நடைமுறை” என்று கூறிய நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி, “மக்க ளுக்கு சேவை செய்வதற்காக சுதந்திர மாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். இந்தியாவில், நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” என்றார். மேலும், குடியரசுத் துணைத் தலைவருக்குத்தான், மாநிலங்களவை யின் தலைவராக, நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை காப்பாற்றும் மிகப் பெரிய கடமை இருக்கிறது.

நான்,  இப்பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டால், என்னுடைய பொறுப்பை மிகுந்த கவனத்துடனும், நாடாளு மன்ற அவைக்கு உரிய கண்ணி யத்துடனும் நடத்துவேன் என்பதை உறுதியளிக்கிறேன்” என்றும் தமது அறிக்கையில் பதிவிட்டுள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்து, வேட்பாளராகத் தேர்வு செய்த இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றைக் காக்க போராடுவோம் என்றும் கூறி யிருக்கும் பி. சுதர்ஷன் ரெட்டி, “நமது நாட்டின் அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் நமது மக்களின் நம்பிக்கையோடு, இந்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.