tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மறியல்

சென்னை,டிச.3- கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக ஒன்றிய பாஜக அரசு சட்டங்களை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கட்டுமானத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு 44 அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்கள் குறிப்பாக இந்திய கட்டிட கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996, நல வரிச் சட்டம் -1996, புலம் பெயர்  தொழிலாளர் சட்டம் – போன்ற சட்டங்களை சுருக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக மாற்றியுள்ளது. இதனால் கட்டுமான வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் கோடி ரூபாய்  நல வரி நிதியின் நிலை கேள்விக் குறியாக உள்ளது. தொழிலாளர் களுக்கு சேர வேண்டிய நிதி பயன்கள் நடுத்தெருவில் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் எந்தவித பங்களிப்பு தொகையும் செலுத்தாமல் பல்வேறு பணப்பயன்களை நலவாரியம் மூலமாக பெற்று வருகின்றனர்.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கை யினால் பணப்பயன்கள் நிலை என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.ஜிஎஸ்டி உயர்வினால் கட்டுமானப் பொருட்களின் விலைகள்  கடுமை யாக உயர்ந்துள்ளது. கட்டுமானத் தொழிலை, கட்டுமான தொழி லாளர்களை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்திட கோரி, ஓய்வூதி யம் ரூ.3 ஆயிரம் உயர்த்திட கோரி, இயற்கை மரணம் நிவாரண நிதி ரூ.2 லட்சம், கல்வி உதவி தொகை மற்றும் திருமண உதவி தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்த்திட கோரியும், மாநில நலவாரியங்களுக்கு பணப்பயன்கள் வழங்கிட மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும், வீடுகள் இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீடுகளை உறுதிப்படுத்தக் கோரியும். தமிழக அரசு நலவாரியத்தில் தேங்கியுள்ள பணப்பயன்கள், கேட்பு மனுக்கள், பதிவு, புதுப்பித்தல் மனுக்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுத்திட கோரி,ஆன்லைன் பதிவு மற்றும் நேரடி பதிவு இரண்டையும் அம லாக்கிட கோரியும்நலவாரிய கூட்டம்  

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதி களில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத் தில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர் என்று அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் கே.பெருமாள், மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

;