tamilnadu

img

யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்!

புதுதில்லி, ஜூன் 27-  குடியரசுத் தலைவர் தேர்தலில்  எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாள ராக போட்டியிடும், ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா (85), திங்க ளன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுத் தாக்  கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலை யில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரியும், மாநிலங்களவை பொதுச் செயலாளருமான பி.சி. மோடியிடம், சின்ஹா நான்கு செட் வேட்புமனுக்களை வழங்கினார். நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலை வராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் (ECI), கடந்த ஜூன் 9-ஆம் தேதி அறி வித்தது. 

இதன்படி புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்றும் நடைபெற உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 15-ஆம் தேதி துவங்கி விட்ட நிலையில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்  பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவு பதி முர்மு, கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 25) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை  அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் மற்றும் அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், பிஜூஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வேட்பு மனுத் தாக்கலில் கலந்து கொண்டனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டி ருந்த, ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்  சர் யஷ்வந்த் சின்ஹா திங்கட்கிழமை யன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரியும், மாநிலங்களவை பொதுச் செயலாளருமான பி.சி. மோடியிடம், சின்ஹா நான்கு செட் வேட்புமனுக்களை வழங்கினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலை வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக சார்பில் முன்னாள் ஒன்றிய  அமைச்சர் ஆ. ராசா, திரிணாமுல் காங்கி ரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி, சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தெலுங்  கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் அம்மாநில அமைச்சர் கே.டி. ராமாராவ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் சார்பில் ஜெயந்த் சின்ஹா, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மிசா பாரதி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி யின் சார்பில் என்.கே. பிரேம் சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  முகமது பஷீர் உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

வாக்குகள் பலம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்க ளித்தே குடியரசுத் தலைவரை தேர்ந்தெ டுக்கிறார்கள். அந்த வகையில், நாடாளு மன்ற மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்க ளவை உறுப்பினர்கள் 233 பேர் என மொத்தம் 776 பேரும், சட்ட மன்ற உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 033 பேரு மாக மொத்தம் 4,809 பேர், குடியரசுத் தலை வர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வர்கள். இதன்படி 49 சதவிகித வாக்குகள் மட்டுமே தற்போதைய நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளன. 51 சதவிகித வாக்குகள் எதிர்க்கட்சிகள் வசமே இருக்கின்றன. இதனால்,  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலை மையிலான பிஜூ ஜனதாதளம் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி யின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையே பாஜக கூட் டணி நம்பியிருக்கிறது. அந்தக் கட்சிகளும் எதிர்பார்த்தபடியே பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சமமான போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூன் 29 கடைசி நாளாகும். ஜூலை 2-ஆம்  தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

முர்முவுக்கும் எனக்குமானது சித்தாந்தப் போர்! - ஊடகங்களுக்கு  சின்ஹா பேட்டி

வேட்புமனுத் தாக்கலுக் குப் பின் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த யஷ்வந்த் சின்ஹா, “திரவுபதி முர்முவுக்கும், தனக்குமான போட்டி, தனிப்பட்ட மோதல் அல்ல. மாறாக, இந்திய அர சியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான      போராட்டம். இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் இது!” என்று தெரி வித்தார். மேலும்,, “குடியரசுத் தலைவ ராக, தான் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்  தில் நிச்சயமாக ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குடிய ரசுத் தலைவராக செயல்பட மாட்டேன். திரவுபதி முர்முவைக் காட்டிலும் நாட்  டின் அரசியலமைப்பை பாதுகாப்ப தற்கு சிறப்பான பங்களிப்பை செலுத்து வேன்” என்று குறிப்பிட்டார்.

வெறுப்புக்கும் கருணைக்கும் இடையேதான் உண்மையான போட்டி

ராகுல் காந்தி பேசுகையில், “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றன. இங்கு நடப்பது தனி நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. உண்மையான போட்டி 2 கொள்கைகளுக்கும் இடையிலானது. ஒரு கொள்கை வெறுப்பு மற்றும் கோபத்தை கொண்ட ஆர்எஸ்எஸ்-ஸூக்கு சொந்தமானது. மற்றொன்று கருணையை போதிக்கும் கொள்கை. அதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
 

;