tamilnadu

img

அஞ்சல் வேன்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு வழங்கிடுக.... மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கடிதம்...

மதுரை:
தேசிய நெடுஞ்சாலைகளில் அஞ்சலகத்துறை அஞ்சல் வேன் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில்கட்டண விலக்குக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளசுங்கச்சாவடிகளில் அஞ்சலகத்துறை வாகனங்களுக்குக் கட்டண விலக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாவடி கட்டண விதிகள் திருத்தத்தின் போது, அஞ்சலகத்துறைக்குச் சொந்தமான மெயில் வேன்கள் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கான கட்டண விலக்கு வழங்கப்படவில்லை. இந்த வாகனங்கள் தபால்களைக் கொண்டு சேர்ப்பதற்காகப் பல சுங்கச்சாவடிகளைத் தினந்தோறும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. கொரோனா தொற்றுக் காலத்தில் நாடெங்கிலும் விலையுயர்ந்த மருந்துகள்மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை அர்ப்பணிப்புமிக்க அஞ்சல கத்துறை ஊழியர்கள் அஞ்சலகத்துறை வேன்கள் மூலம் கொண்டு சேர்த்தனர். பொதுமக்களுக்கான சேவை நோக்குடன் செயல்பட்டுவரும் அஞ்சலகத்துறை சார்ந்த அஞ்சல் வேன்கள் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணங்களிலிருந்து விலக்களிக்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து அஞ்சலகத்துறை அஞ்சல் வேன்கள் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டண விலக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;