tamilnadu

img

காந்தி நினைவிடத்தில் ‘காந்திகள்’

மதுரை, அக்.2-  அக்டோபர்  2 மகாத்மா காந்தியடி களின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை பாலர் பூங்கா அமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மகாத்மா  காந்தி முகமூடி அணிந்து ராஜாஜி பூங்கா அருகில் இருந்து பேரணியாக வந்தனர். பின்னர் காந்தி அருங்காட்சி யகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் நினைவிடத்தில் மலர்தூவியும் மரியாதை செலுத்தி னர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் சார்பில் மாண வர்களுக்கு விளையாட்டுக் போட்டி, மகாத்மா காந்தியின் நினைவுகள் குறித்து கலந்துரையாடல், சமத்து வத்தை வலியுறுத்தி கை ரேகை பதிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் மகாத்மா காந்தி குறித்து தங்களுக்கு தெரிந்தவைகளை  பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாலர் பூங்கா  ஒருங்கிணைப்பாளர்கள்  பி. கோபிநாத், க. பாலமுருகன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ரமேஷ், மதுரை வாலிபர் சங்க சிலம்ப பயிற்சி பள்ளி ஆசிரியர் வடிவேல், நிருபனா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நாரா யணன், தியாகு, இனியன், முதின்ஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

;