tamilnadu

சாம்சங் தொழிலாளர்க்கு ஆதரவாக அக்.15 போராட்டம்

இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங்-இல் பணியாற்றும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தங்களது அடிப்படை உரிமைகளுக்காகவும் தங்களது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை யையும் முன் வைத்து  அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இப்போராட்டங்களுக்குப் பிறகும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களுக்கு பிறகும் தொழிலாளர்களின் ஊதிய திருத்தம் தொடர்பான சில  கோரிக்கைகளை மட்டும் ஏற்பதாக சொல்லிவிட்டு, சாம்சங் தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க முடியாது என்று நிறுவனம் விடாப்பிடியாக உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரி மையை முற்றிலும் மீறிய செயலாகும்.  சங்கத்தை அங்கீகரித்தால் தொழி லாளர்களின் ஒற்றுமை மேம்படும், அவர் களை தனித்தனியாக வேலையை விட்டு நீக்கவோ ஊதியக் குறைப்பு செய்யவோ இயலாது. மேலும் அர சமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இன்ன  பிற தொழிலாளர் நல அணுகுமுறை களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டி வரும் என்கிற காரணத்தினால் நிறு வனமானது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. சாம்சங் நிறுவனத்தின்  சட்டத்திற்கு  புறமான இச்செயலை அரசு கண்டி த்திருக்க வேண்டும்.

மாறாக காவல்துறையானது அமைதியான வழியில் போராடும் தொழிலாளர்களை அடாவடியாக கைது செய்வது, வீட்டிற்குச் சென்று மிரட்டுவது, போராட்ட இடத்தை சீர்குலைப்பது போன்ற கண்டனத்திற்குரிய நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் தொழில் நிறுவனங் கள் பெருக வேண்டும், இளைஞர் களுக்கான வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது, அதே நேரத்தில் பல நூறு ஆண்டுகளாக போராடிப் பெற்ற அடிப்படை உரிமை களை  பறிக்கக்கூடிய  கார்ப்பரேட் நிறு வனமான சாம்சங்கிற்கு  ஆதரவாக,  தொழிலாளர்களுக்கு  எதிராக தமிழக அரசு நிற்பது வேதனை அளிக்கிறது.   ஒரு மாத காலம் ஆகியும் சுடும் வெயி லையும் கடும் மழையையும் பொருட்ப டுத்தாது தங்களது போராட்டக் களத்தை தீவிரப்படுத்திக் கொண்டி ருக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு  உலகெங்கிலும் இருந்து ஆதரவு குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தமிழ் நாட்டில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரி விக்கும்  விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் கூட்டாக இணைந்து அக்டோபர் 15 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆதரவு போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கிறோம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.