tamilnadu

img

பொது வேலைநிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆதரவு

தூத்துக்குடி, மார்ச் 16- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு எட்டயபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  புதிய தாக தேர்வு செய்யப்பட்ட 17 பேர்  கொண்ட புதிய மாநில குழு நிர்வாகிகள்  தமிழக சமூக நலன்- மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில்  சந்தித்து மாநில மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முப்பத்தி ஆறு ஆண்டுகளாக நிரந்தரமாக செயல்படுத்தும் சத்து ணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து  ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியம்  ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக் கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு ரூபாய் மூன்று லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும், ஐந்து ஆண்டு பணி முடித்த சமையல் உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது என்பதை தவிர்த்து சமையலர் காலிப் பணியிடம் ஏற்படும்போது உதவியா ளர்களுக்கு பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,

பணியில் உள்ள ஊழியர்களுக்கு கல்வித் தகுதியை கணக்கில் கொண்டு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் தகுதி சிறப்புத் தகுதி பெற்று உள்ளவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமைப்பா ளருக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வும் சமையலர் உதவியாளர் களுக்கு அலுவலக உதவியாளர் காலிப்  பணியிடங்களில் பதவி உயர்வும்  வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர் களுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை  தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும், பணி காலத்தில் இறந்து போன  சத்துணவு ஊழியர்களின் வாரிசுக ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்காமல் தமிழகம் முழுவதும்  நிலுவையாக உள்ளன.

அரசின் விதி தளர்வு பெறவேண்டிய இவைகளில் தாமதத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியரை பணி வழங்க வும் பின்னர் அரசு பின்னேற்பு வழங்கிட வும் மற்றும் பணி வழங்கும் போது கல்வித்தகுதி அடிப்படையில் பணி  நியமனம் வழங்கவும் பெண் வாரிசு  இல்லாத நிலையில் ஆண் வாரிசுக ளுக்கு அரசு பணி வழங்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் காலை டிபன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும், பெட்ரோல் டீசல் விலையை குறைத் திட வேண்டும், ஆண் அமைப்பாளர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு  சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்து முழு ஒத்துழைப்பு வழங்குவது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.