சென்னை,மார்ச் 9- சென்னை பாடியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றுபவர் சிவசங்கரி. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 2 லட்சத்து 306 கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளார். இதேபோல் திருச்சி பீமன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் தாரணி என்பவர் 3 லட்சத்து 2 ஆயிரத்து 5 தடுப்பூசி கள் செலுத்தியிருக்கிறார். தேசிய அளவில் சாதனை படைத்த இந்த இரண்டு செவிலியர் களுக்கும் தில்லியில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் விருது வழங்க ப்பட்டது. ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட லியா விருதுகளை வழங்கினார். சிவசங்கரி விருதை பெற்றுக் கொண்டார். தாரணி செல்ல வில்லை. அவர் சார்பில் பொது சுகாதாரதுறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் பெற்றுக் கொண்டார்.