சென்னை,அக்.28- சுமார் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் திங்க ளன்று (அக்.28) பிற்பகல் வெளி யிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என முத லில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியாகும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரிக்கப் பட்டது. இதனால் தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். தேர்வு முடிவுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ஜான் லூயிஸ் வெளி யிட்ட செய்திக்குறிப்பில். “கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள் ளன. தேர்வர்கள் தங்கள் பதி வெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண், ஒட்டு மொத்த தரவரிசை, இனசுழற்சி தர வரிசை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தர வரிசை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். விரைவில் பட்டியல் வெளியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள், உரிமை கோரல்கள், நிய மன ஒதுக்கீடு விதி ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வாணை யத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுபவர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர் பட்டியல் விரை வில் இணையதளத்தில் வெளி யிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரி விக்கப்படும். தபால் வழியாக எந்தத் தகவலும் அனுப்பப்படாது. எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார். 92 நாட்களில் தேர்வு முடிவு குரூப்-4 தேர்வு முடிந்து 92 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. தேர்வு முடி வுற்று 92 நாட்களில் முடிவுகள் வெளி யிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.