ஆளுநரைக் கண்டித்து நெல்லையில் மாணவர்கள் போராட்டம்
திருநெல்வேலி, அக். 24 - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறு ப்பினராக ஏபிவிபியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) போராட்டத்தில் ஈடுபட்டனர். “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில்- வேந்தர் என்ற முறையில் 3 நபர்களை நியமன உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள ஆளுநர் பரிந்துரை வழங்கி யுள்ளார். கல்வி, கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர் களையே, சிண்டிகேட்டில் ஆளுநர் நிய மிக்க முடியும். ஆனால் ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தென் தமிழகத் தலைவராக இருக்கும் சவிதா ராஜேஷ் என்பவரை திரு நெல்வேலி மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப் பினராக நியமித்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்களை காவிமய மாக்கவும், தேசிய கல்விக் கொள்கை யை அமல்படுத்தவும் நிர்வாகத் துறை களில் சங்- பரிவார் அமைப்பினரை ஊடுருவச் செய்யும் முயற்சியாக ஆளு நர் இந்த நியமனத்தை மேற்கொண்டுள் ளார். கேரளத்தில் இதே போன்று ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை நியமிக்க ஆளுநர் ஆரிப் கான் முயன்றபோது நீதி மன்றம் தலையிட்டு அந்த நடவடிக்கை யை தடை செய்தது. அதிலிருந்து கூட தமிழ்நாடு ஆளுநர் பாடம் கற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். எனவே, ஆளுநரின் இந்த அத்து மீறல் நடவடிக்கையை கண்டித்தும், சிண்டிகேட் நியமன உறுப்பினரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள் ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் பால குமார், தினேஷ், அஜய் உட்பட பல்க லைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.