tamilnadu

img

நெரிசல் மிகுந்த பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது நிலக்கோட்டை மக்கள் கோரிக்கை

நெரிசல் மிகுந்த பகுதியில் பட்டாசு  கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது  நிலக்கோட்டை மக்கள் கோரிக்கை

சின்னாளப்பட்டி,அக்.10- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்  நால் ரோடு பகுதி மக்கள்,வாக னங்கள் நெரிசல் மிகுந்தது.  தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்ப தால் வழக்கத்தைவிட போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே குறுகலான சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக பட்டாசு கடை கள் அமைக்க அனுமதி தரக் கூடாது. ஏற்கனவே வழங்கப் பட்டிருந்த பழைய உரி மத்தையும் இரத்துசெய்ய வேண்டும், அசம்பாவிதம் ஏற்படும் முன் பொதுமக்கள் நலன் கருதி புறநகர் மற்றும் அகலமான சாலை பகுதி யில் மட்டுமே பட்டாசு கடை கள் அமைக்க உரிமம் வழங்க வேண்டும். இதற்கு  மாவட்ட ஆட்சியர்,மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு அலு வலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.