tamilnadu

img

மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது! - சு.வெங்கடேசன் எம்.பி.,

மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது என்று ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இலச்சினையில், 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்றும், அசோக சின்னத்தை நீக்கிவிட்டு இந்து கடவுளான தன்வந்திரியின் படத்தையும் சேர்த்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது என்று ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. 
மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல… மக்களின் உயிரோடு விளையாடுவது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;